செந்தமிழ் நாடு
வாடிவாசல் திறக்க நாங்கள்
வெட்ட வெளிக் கிடந்தோம்...
வீடு வாசல் திறந்ததுகாண்
பீடு நடை போட்டு...
மூச்சு வாசல் அத்தனையும்
சொன்ன வார்த்தை - உரிமை...
கடல் வாசல் வந்த கூட்டம்
வான் வாசல் தொட்டோம்.
நெடு வாசல் துயர் காண
ஓடி நாங்கள் வந்தோம் ...
அன்னம் இட்டோர் அடிவயிறு
பதைக்கும் நிலைக் கண்டோம்...
தமிழ் மண்ணை துளைப்போட்டு
சவமாக்கும் எண்ணம்...
உங்களையே எருவாக்கி
பயிர் படைப்போம் வாரீர்.
கோட்டைவாசல் அத்தனையும்
பேய்களின் கூட்டம்...
பதவி,பணம், பேராசை,
சாக்கடையின் புழுக்கள்...
விட்டோம் என் நினையாதீர்
விளையாட்டாய் நீங்கள்...
எங்கள் அடி உங்களது
இறுதி மூச்சின் மீதே.
வாசல், வீதி, காடு, மேடு,
குப்பை, கூளம், வெயில், பனி,
பசி, நோய், அடி, துன்பம்,
அவமானம், ஆளாத்துயர் -
தந்திரமாய் அனைத்தும் தந்து,
அடுக்கடுக்காய் வஞ்சம் செய்து...
வாழ்ந்து பார் எனச் சொல்லும்...
மூத்தக் குடி தமிழ் மண்ணை...
இந்த - எச்சில் குடி அரசுகள்.