வாழ்வே பதில்....
![](https://eluthu.com/images/loading.gif)
நான் சொற்களிடம்,
சரணடைந்தபோது...
என் கேள்விகளால் எழுப்பிய-
வேள்வி தீயில்....
என்னையே அவிர்பாகமாய்-
அர்பணித்தார்கள்....
மௌனத்தின் மையத்தில்...
என்னை நான் இழந்தபோது,
கேளாத கேள்விகளுக்கும்...
பதிலாய் வாழ்க்கை-
நகர்ந்து கொண்டிருந்தது...