விரும்பாமல் வீசிவிட்ட பார்வைகள்
அவள் அறிந்தோ அறியாமலோ!
விரும்பியோ விரும்பாமலோ!
வீசிவிட்டுப் போகும் பார்வைகளில்...
தொலைத்துவிடலாமோ என்றெண்ணிய
உணர்வுகளெல்லாம் நெஞ்சத்தில்
நீங்காமல் நிலைத்துவிடுகின்றன...
அவள் விரும்பும் வகையில் எதுவும் செய்யாமல்
நான் விரும்பும் எழுத்துக்களில் மட்டும் என்மேல்
விருப்பமில்லா இனிமையான அவள் உணர்வுகளை
எத்தனை நாள் தான் சுமந்துகொண்டு திரிவேனோ???