திரும்பி பாரடி கொஞ்சம்

இதுவர இப்படி
இருந்ததில்ல
ஏன் இந்த நிலையினு
புரியவில்ல
போகும் பாதை
தெரியவில்ல
போர்க்கள பதட்டம்
மனசுக்குள்ள

உன்ன பாத்த
அந்தநொடி -என்
உத்திரமெல்லாம்
சிலிர்க்குதடி
உன் உதடுகள்
பேசும் மௌனமொழி
எரித்தனளாய் என்னை
கொல்லுதடி

தரைக்கு வலிக்காம
நீ நடக்க
தயங்கி தயங்கி
நான் தொடர
உன் காதணி
வா என தலையசைக்க
உன் கூந்தலோ
போ என தடைவிதிக்க

திரும்பி பாரடி கொஞ்சம்
என்றே என்மனம் கெஞ்சும்

நீ புருவம் அசைத்தல்
போதும்
பூ புயல்
என்மேல் மோதும்.....

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (3-Mar-17, 12:43 pm)
சேர்த்தது : அ வீரபாண்டியன்
பார்வை : 147

மேலே