ரகசிய பெட்டகம்
பகலின் மீது போர்தொடுத்த
இருள்
தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட,
மெள்ள மெள்ள பின்வாங்கிய
பகல் புறமுதுகிட்டோட
விரட்டி விட்ட வெற்றிக்களிப்பில்,
இருள்!
ஓடியது இனி தன் வழியில்
குறுக்கிடாது என்று
களிப்படைந்து சற்றே அயர்ந்த
நேரத்தில்,
பதுங்கிய போராளி மீண்டும்
ஒரு தாக்குதலுக்கு
தயாராவதைப் போல
நேரடித் தாக்குதலுக்கு
தயாராய் பகலும்!
இதையறியாது கம்பீரமாய்,
இருளும்!
நேரத்திற்காக காத்திருந்து
தன் முதல் அஸ்திரத்தை
பிரையோகித்து,தான்
புறமுதுகிடவில்லை என்பதை
இருளுக்குணர்த்தியது பகல்!
பதுங்கியது பாய்வதற்கே
என்பது புரிந்து
தோல்வி கண்முன் நிழலாட
மௌனமாக பின் வாங்கியது
அன்றைய நிகழ்வுகளை
தன்னுள் பதித்து,இருள்!
தான் அடைந்த அவமானத்தை
மறக்க
ஆக்ரோஷத்துடன் அன்றைய
பதிவுகளை
தன்னுள் பதித்தது இருளை
விரட்டிய பகல்!
இவர்கள் போராளிகளா அல்லது
விளையாட்டுப் பிள்ளைகளா?
ஆனாலும் இது தொடர்கதையாக!
பல ரகசியங்களை சுமந்த படி!
பகல் இரவாய் வலம் வந்தபடி..,
#sof_sekar