நான் செய்த தவறு
நான் எனது பைக்கில் பணிக்கு சென்றுக்கொண்டு இருந்தேன். வழியில் ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எறிந்ததாள் நின்றேன்.
அப்போது எனது வாகனத்தின் பின்னால் ஒரு கார் வந்து இடித்தது. அந்த கார் இடித்ததில் எனது வாகனத்தின் பின் விளக்கு உடைந்தது. நான் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் சண்டை போட ஆரம்பித்தேன். வயதில் பெரியவர் என்று கூட பார்க்காமல் நான் அவரை அறைந்தேன். பிறகு அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினார்கள்.
அங்கு இருந்து கிளம்ப பைக்கை எடுத்தேன். அப்போது ஒருவர் என்னிடம் வந்து "சார் எனக்கு லிப்ட்(lift) கொடுங்கள் சார் ரொம்ப அவசரம் என்னை அடுத்த சிக்னலில் விட்டு விடுங்கள் சார்" என்று என்னிடம் உதவி கேட்டார். அதற்கு நான் "தெரியாத ஆட்களுக்கு எப்படி உதவி செய்வது? முடியாது. என்னால் உங்களுக்கு உதவ செய்ய முடியாது" என்று கூறி அங்கிருந்து கிளம்பினேன்.
அடுத்த சிக்னலிலும் சிவப்பு விளக்கு எறிந்ததால் நின்றுக்கொண்டு இருந்தேன் அப்போது ஒரு பிச்சைக்காரன் என்னிடம் காசு கேட்டான். அதற்கு நான் " உனக்கு கை, கால் நல்லா தான இருக்கு ஏன் பிச்சை எடுக்குற. என்னால காசுலாம் குடுக்க முடியாது போ!! போ!!" என்று கோபமாக திட்டிவிட்டேன்.
பச்சை விளக்கு எறிந்ததும் அங்கிருந்து வேலைக்கு கிளம்பினேன். அன்று வேலையிலும் பிரச்சனை. இன்று நாளே சரியில்லை என்று நினைத்துக்கொண்டு வேலையை முடித்து விட்டு வீடு திரும்ப எனது பைக்கில் வீட்டுக்கு வந்துக்கொண்டு இருந்தேன்.
ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு வந்ததால் சிக்னலில் சிவப்பு விளக்கு எறிவதை கவனிக்கவில்லை. அருகில் ஒரு லாரி சாலையை கடந்துக்கொண்டு இருந்தது. லாரியின் மீது மோதக்கூடாது என்பதற்காக பைக்கை திருப்பினேன். பைக் எனது கட்டுப்பாட்டை இழந்து ஒரு கம்பத்தில் மோதி கீழே விழுந்தது. நானும் கீழே விழுந்தேன். எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நான் மயங்கினேன்.
அங்கே நான் மயங்கி கிடப்பதை மக்கள் கூட்டமாக நின்று பார்த்து கொண்டு இருந்தார்கள் அப்போது ஒருவர் வந்து என் முகத்தில் தண்ணீர் தெளித்தார். நான் விழித்தேன், எனக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். அவர் யாரென்று பார்த்தேன் அவர் வேறு யாருமில்லை நான் காசு தர மறுத்த பிச்சைக்காரர் தான்.
என் தலையிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது அதை பார்த்ததும் கூட்டத்திலிருந்த ஒருவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர் வேறு யாருமில்லை "எனக்கு லிப்ட்(lift) கொடுங்கள்" என்று என்னிடம் உதவி கேட்டவர்.
மருத்துவமனைக்கு சென்றதும் மருத்துவர் எனக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். அந்த மருத்துவர் வேறு யாருமில்லை "காரில் வந்து என் பைக்கை இடித்தவர்" தான். அப்போது தான் நான் செய்த தவறை உணர்ந்தேன்.
யாரையும் தாழ்வாக எண்ணாதே.(பிச்சைக்காரனை உணர்த்துகிறது)
எல்லோரையும் மதித்து நட.(பைக்கை இடித்தவரை உணர்த்துகிறது)
தெரியாதவர்களுக்கும் உதவி செய்.(லிப்ட் கேட்டவரை உணர்த்துகிறது)