பஞ்சி்ல் பயணம்
மடங்கா கம்பளமாய்
நீல விரிப்பு !
சிதறி கிடக்கும்
வெண் திட்டு !
பஞ்சடைத்த விரிப்பிலே
சுற்றி எங்கும்
வெண் பஞ்சு !
பஞ்சென மேகம்
தொடும் தூரம்
பறக்கும் பட்சிகள் !
பறந்து செல்லும்
பட்சிகளுக்குள் ஒருவனாய்
நானும் இருக்க.....
வெண் பஞ்சினை
கடன் கொண்டு
ஏறி செல்ல........
உலாவும் தூரம்
மெல்ல மிதந்து
பயணம் போக........
என்னவள் தான்
இருக்கும் இடம்
அழைத்து செல்லாதோ !

