ஆடு மயிலே

ஆண்டவன் தொடங்கிய ஆட்டமிது
அணங்கிவள் தொடர்வது அழகன்றோ,
காண்பவர் வியந்திடும் கண்ணழகும்
காட்சிக் கினிய முகமதுவும்,
வேண்டிய உணர்ச்சி காட்டிடுமே
வேதனை மனத்தில் தீர்த்திடுமே,
தூண்டிடும் இன்பம் நிலைத்திடுமே
தெய்வக் கலையிது வாழியவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-17, 7:32 am)
Tanglish : aadu mayile
பார்வை : 101

மேலே