களத்துமேட்டில் காத்திருக்கேன் - கிராமியப் பாடல்
களத்துமேட்டில் காத்திருக்கேன்
நீயும் வந்தா நானும் வாரேன்.
வெள்ளாம வெளஞ்சிருக்கு
வெதச்ச நெல்லும் கதிராச்சு .
ஏண்டி புள்ள கருப்பாயி
அக்கம் பக்கம் யாரும் இல்ல
ஆச முத்தம் தாடி புள்ள
ஆச மச்சான் வந்திடுவேன்
அணைக்கலாம் வாடி புள்ள !
ஏண்டி புள்ள கருப்பாயி ...
ஒத்தையடிப் பாதையில ஒதுங்கி
நீயும் போகையில -என்
சித்தம் கலங்குதடி .....
பித்தும் பிடிக்குதடி ....!
உன் ஒல்லியான இடுப்பு
என்ன கொல்லுதடி மனசுக்குள்ள ...
உன் சிங்காரச் சிரிப்பொலி என்
சிந்தையத் தான் கலக்குதடி ... !
ஏண்டி புள்ள கருப்பாயி
உள்ள வாடி கிட்டையில
ஓரக்கண்ணால் பார்க்கையில - என்ன
உசுரோட கொல்லுதடி .... !
ஏங்கியே தவிக்குதடி ...செல்லம்
எதனாச்சும் சொல்லடி ..... !
ஏண்டி புள்ள கருப்பாயி
என்ன விட்டுப் போவாதடி !
தனிச்சும் தான் நிக்கிறேன் ...
உன்ன நெனச்சு - தாடியும் தான்
வளர்த்துக்கிட்டேன் ....நான் ... !.
மௌனமா போகாதடி - மானே
மாலையோட என்னைத்தேடி வாயேன் .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

