காளைகளை காத்த காளைகள்

"கருப்பு பொங்கலாய் - எங்கள்
கருத்தை உணர்த்தினோம்!
கண்டுகொள்ளாத ஆட்சியாளர் கண்களில்
கானல் நீராய் காட்சியளித்தோம்!
உணர்வை வெளிபடுத்தினோம்
உணர்ச்சியற்ற ஆட்சியாளர்களிடத்தில்!
சிறு கூட்டம் தானே!
தானே சிதறிவிடுமென்ற
எண்ணம் உங்களுக்கு!
சிதறாத எங்களை தொட்டீர்கள்!
பதறாமல் கூடினோம் மெரினாவில்
கரைகளில் அமர்ந்த அலைகளடா - நாங்கள்
சீறும் ஆழிபேரலையாய் உருவெடுத்தோம்!
தலைவனற்ற அறப்போரில் -தென்பட்ட
தலைகளணைத்தும் தலைவனடா !
திறந்தோம் அறவழியில்
ஜனநாயக வாசலை- ஆம்
திறந்தது வாடிவாசல்!
கலாசாரத்திற்காக களங்கண்ட
காளையர்களடா நாங்கள்- இனி
என்றும் களத்தில்
எங்களுடன் காளைகள்!
உணர்வை தொட்டால்
நெருப்பாய் எரிப்போம்!
எரிவது விறகல்ல- அனணவதற்கு
எரிமலை கூட்டமடா நாங்கள்!"

எழுதியவர் : ராஜசேகர் (5-Mar-17, 8:25 pm)
பார்வை : 950

மேலே