வாடின காலங்கள்

வானத்து நிலவிங்கே வாசல்வந்திடுமா ?
வானத்து விண்மீன்கள் விடியல் தந்திடுமா?
செடியிலுள்ள பூக்களெல்லாம் தேடிவந்திடுமா ?
தென்மதுரை சிற்பமென்ன ஓடி வந்திடுமா ?

அங்கும் இங்கும் ஓடின கால்கள்
அலைபேசியால் தொல்லையானதே
அட!
தொலைந்துபோனதே

அலைபாயும் நெஞ்சம் இப்போ
அலைவரிசையை தேடிப்போனதே
அட!
ஓடிப்போகுதே

அங்கும் இங்கும் ஓடிக்கிட்டே
அலைபேசியில் முழுநேரமும் முகம்பார்த்தேனே
உன்னை எதிர்பார்த்தேனே! தொலைந்துபோன
என்னை நானே தேடிபார்த்தேனே!

நண்பர்கூட்டம் நாளு சொல்ல
நடுங்கிப்போயி நானிருந்தேன் நானோ !
கண்ணெதிரே கண்ணிருந்தும்
காலோரம் கால்நடந்தும்
காணவில்லை வார்த்தைகள்தான் ஏனோ?-அதனால்
வாடிநின்றேன் நானோ !
வாடிநின்றேன் நானோ !
வாடிநின்றேன் நானோ !

எழுதியவர் : செ.மகேந்திரன் (5-Mar-17, 11:41 pm)
பார்வை : 83

மேலே