நட்பின் வசந்தம்...

இலையுதிர் காலங்களில்
ஒவ்வொரு இலையும் நானாவேன்
நம் நட்புக்கு உரமாக..
மழைக்காலங்களில்
ஒவ்வொரு மழைத்துளியும் நானாவேன்
நம் நட்பை பெரும் வெள்ளமாக்க..
வெயில் காலங்களில்
ஒவ்வொரு நிழலும் நானாவேன்
நம் நட்பு கருகாமல் இருக்க..
வசந்த காலங்களில்
மலையும் நதியும்
நிலமும் வானும்
மலரும் செடியும்
மொத்தமாய் எல்லாமே நானாவேன்
நம் நட்பு முழு வசந்தமாக..