நீயும் பார்க்க நானும் பார்க்க

நீயும் பார்க்க… நானும் பார்க்க...
அடிநெஞ்சில் பூக்களாய்
பூத்துக் குலுங்கும்
அந்த ஒரு நிமிடம் மட்டும்
அப்படியே நின்றுவிடாதா???

நீயும் பார்க்க... நானும் பார்க்க...
என்னுள்ளான மகிழ்ச்சி
எல்லையில்லாமல் இருக்க
நீ என்னதான் நினைப்பாய்
என்னைப்பற்றி???

நீயும் பார்க்க... நானும் பார்க்க...
பார்வைகள் முடிந்து
இமைகள் திரும்பும்
ஒவ்வொரு வேளையும்
நான் ஏன் உணர்கிறேன்
குற்றம் புரிந்தவனாய்???

நீயும் பார்க்க... நானும் பார்க்க...
திகட்டா இன்பம் தந்த
அழகான அந்நொடியின்
அடுத்த நொடி நீ
விலகிய நேரத்தில்
ஏன் எவ்வளவோ துன்பமாக??

நீயும் பார்க்க... நானும் பார்க்க...
உன்நினைவுகளின் குழியில்
வீழ்வித்திவிட்டுச் செல்லும்
பார்வைகளைத் தராதே...
என்றெண்ணிவிட்டு
ஏன் ஏக்கமுடனே
பார்துக்கொண்டிடுக்கிறேன்
எனை விரும்பாத விழிகளை???

நீயும் பார்க்க... நானும் பார்க்க...
சாக்க்கிடந்த நினைவுகளை
பார்வையால் பாதிஉயிராக்கி
மீண்டும் பார்த்து முழுமையாக்குவாய்
என்று பார்த்திருக்க
பாராமல் உயிர்துடிக்கவைத்துச்
சென்றதேனடி என் பைங்கிளியே???

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (6-Mar-17, 10:03 pm)
பார்வை : 187

மேலே