சின்ன சின்ன ஆசை

……………………………..வேண்டும்……………………………

அம்மா மடியில்
உறக்கம் வேண்டும்………….

அப்பா அதட்டையில்
அமைதி வேண்டும்…………

அக்கரை உடைய
ஆசிரியர் வேண்டும்………..

அழுதால் துடைக்க
கைகள் வேண்டும்………….

சாகும் வரை
சிரிப்பு வேண்டும்………

சின்ன சின்ன
சண்டை வேண்டும்……

மாதம் ஆனால்
மாரி வேண்டும்…………..

உழவன் பூ மனம்
மகிழ வேண்டும்…………………………


இதயம் பறக்க
பாடல் வேண்டும்………….

அனைத்தும் பகிர
நட்பு வேண்டும்………….

ஆண் , பெண் அரியா
நண்பர்கள் வேண்டும்…………

காலம் இனிக்க
கவிதை வேண்டும்…………..

கனவு இல்லா
உறக்கம் வேண்டும்………….

வாழ்க்கை முழுக்க
தேடல் வேண்டும்………….

ஈருடல் ஓர் உயிர்
காதல் வேண்டும்………………

கடலில் மழையில்
நனைய வேண்டும்……………

திணமும் அருவியில்
குளியல் வேண்டும்…………

நீண்ட தூரம்
பயணம் வேண்டும்…
என்னுடன் நீயும்
இருக்க வேண்டும்………..

மகிழ்ச்சியில் மட்டும்
கண்னீர் வேண்டும்…….

வாழும் போதே
சொர்கம் வேண்டும்………………

எழுதியவர் : அதற் உத்தர VIcky (7-Mar-17, 7:17 am)
Tanglish : sinna sinna aasai
பார்வை : 737

மேலே