தேனுண்ணும் வண்டாய் கருமணிகள்

தேனுண்ண வந்த வண்டு
உண்ட தேனில் மயங்கி
அந்த மலரிலேயே தங்கி
உருண்டு புரள்வதுபோல்
அவள் விழிகளில் கருமணிகள்
களிநடனம் ஆடிக்கொண்டு…

நான் கண்டுவிட்ட காலத்தில்
அங்கிருந்தே என்நெஞ்சத்தைக்
கொத்தி தானுண்ட தேனால் என்
உள்ளத்தை இனிமையாய் நிரப்பிவிட
திகட்டித்தான் போனது என் மனது
அவள் விழிகளின் இயக்கத்தில்…

மலரிலே மயங்கிக்கிடக்கும்
வண்டுகளைப் போலவே அவள்
நினைவுகளில் மயங்கிய நானோ
எனது கவிதைகளை அவள்
நினைவுகளிளேலே கிடத்திவிட்டு
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்
அவளைப்பற்றி மட்டுமே…

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (7-Mar-17, 4:28 pm)
பார்வை : 101

மேலே