எதை எழுத என்ன எழுத எல்லாம் கூடிடும்

எதை எழுதுவது ! என்ன எழுதுவது ! இருந்தாலும் எழுதிடல் வேண்டும் ..

உன் அழகு பற்றி எழுதினால் பேரழகாய் மாறிடும்
உன் அன்பு பற்றி எழுதினால் என் மேல் காதல் பெருகிடும்
உன் பார்வை பற்றி எழுதினால் விழிஈர்ப்பு இன்னும் கூடிடும்
உன் பாசம் பற்றி எழுதினால் நேசம் கூடிடும்
உன் காதல் பற்றி எழுதினால் கவிதை கூடிடும்
உன் இதயம் பற்றி எழுதினால் நினைவும் பெருகிடும்
உன் இதழ் பற்றி எழுதினால் வண்ணமும் கூடிடும்
உன் பின்னழகு பற்றி எழுதினால் பித்தமும் பெருகிடும்
உன் முன்னழகு பற்றி எழுதினால் நீ முறைக்க நேரிடும்
மொத்தமாய் உன்னை பற்றி எழுதினால் ஒரு "காவியம் " கூட படைக்க கூடிடும்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (8-Mar-17, 10:13 am)
பார்வை : 142

மேலே