பெண்ணின் மானமும் வீரமும் ===============================
பெண்ணின் மானமும் பெருமைசேர் வீரமும்
=பின்னிப் பிணைந்ததாய் பீடற்ற தாகிடின்
கண்ணின் மணியென காத்திடும் காசினி
=கடவுள் தானென கைதொழும் நாளுமே
மண்ணின் மாதரின் மானமோர் வலையென
=மாறியே விரிந்திடின் மாட்டிடும் பூச்சென
கண்முன் வீழ்ந்ததும் கயமைகள் யாவுமே
=கணப்பொழு ததனிலே கசங்கிடக் காணலாம்
எதிரியின் சதிவலை எதுவென அறிவதில்
=எடுத்திடும் கவனமே எழில்மிகு வீரமாய்
பதித்திடும் மனத்திலே படர்ந்திடும் துணிச்சலே
=பதைத்திடும் பெண்மையின் பலமென கொள்ளலாம்
மானமும் வீரமும் மாதரின் அணிகலன்
=மனதிலே திடமுடன் மலரென சூடியே
ஈனமாய் எண்ணிடும் எளியவர் முன்வரின்
=இங்கெவர் பெண்மையை இகழ்வதாம் கூறுவீர்.
அற்பரின் சொப்பன அறையினில் நிலவிடும்
=ஆசையின் பேய்களை ஆட்டிட துணிந்திடும்
கற்பனை வளர்த்ததை கடைபிடித் தொழுகிட
=கற்பினை காத்திடும் கவசமாய் அதுவரும்
*மெய்யன் நடராஜ்
*குழுமத்தின் மாதர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்