திக்குமா - தித்திக்குமா
விழியே ....
என்ன பாவம் செய்தாயோ...என்னை வந்து சேர ....
எப்போதும் கண்ணீரே பரிசாக பெறுகிறாய்....
நடுநிசியிலும் நனையும் பூ நீதானோ ...!
வலியே....
இம்மையில் தொடரும் போராட்டம் ...
முற்று பெற வழி இல்லையோ ....
ஆம்!! வலியின் வலி பெரியதே ...!!
பிறப்பே ....
வரும் வாழ்க்கை இவ்வளவு ஆராசுவடுகள்
கொண்டு வரும் என தெரிந்திருந்தால்
சிசுவாக உயிர்த்தெழ மறுத்திருப்பேனே ....!!!
தோல்விகளே ...
கொஞ்சம் நீயும் ஆசுவாசப்படுத்திக்கொள் ...
என்னை சுற்றியே உன் வாழ்க்கையும் செல்கிறதா? ..
உன் பயிற்சி பட்டறையில் எனக்கு தான் முதல் பரிசா ...!!!!
வருங்காலமே...
உணர்ந்தேன் ...விதி வலியது தான் ...
அவ் "வலி " இனியும் என்னை என்ன செய்துவிடும் ...
பெறுவதற்கு வெற்றியை தவிர வேறில்லை எனும் நேரத்தில் ...!!!!!