அவள் ஒரு முழுமதி
என் வீட்டின் வெளியே நின்றுக்கொண்டு என் நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அது ஒரு இரவு பொழுது. அன்று பௌர்ணமி என்பதால் வானில் முழுநிலவும் தெரிந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது என் வீட்டிலிருந்து இரண்டாவது வீட்டில் ஒரு அழகிய பெண் வெளியே வந்தால். அவளை நான் இதுவரை அந்த வீட்டில் பார்த்ததில்லை.
அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள். வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தாள் அதில் அவளின் அழகு அந்த நிலவையே மிஞ்சி விட்டது. நான் அவளையே மெய் மறந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் பார்ப்பதை அவள் பார்த்து விட்டால்.
உடனே நான் என் தலையை திருப்பி நண்பனிடம் பேச ஆரம்பித்தேன். பேசிக்கொண்டே அடிக்கடி அவளை பார்த்து ரசித்தேன். நான் பார்க்கிறேன் என்று தெரிந்தும் அவள் அங்கேயே நின்றுக்கொண்டு இருந்தால்.
சிறிது நேரம் கழிந்ததும். அவள் என்னை நோக்கி நடந்து வந்தால். அந்நேரம் எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அவள் என்னை திட்டித்தீர்க்க போகிறாள் என்று நினைத்தேன். அவள் என் அருகில் வந்துவிட்டால். நேராக என் வீட்டினுள் சென்று விட்டால்.
அப்பொழுது தான் என் மனது அமைதியானது. திடிரென்று எனக்கு ஒரு அதிர்ச்சி இவள் ஏன் என் வீட்டினுள் செல்கிறாள் என்று. ஒருவேளை என் அம்மாவிடம் கூறிவிடுவாளோ என்று மறுபடியும் பயந்தேன். என் வீட்டினுள் சென்ற பிறகு அவள் என் அம்மாவிடம் பேசும் சத்தம் எனக்கு கேட்டது. இன்று வீட்டில் எனக்கு செம அடி விழப்போகிறது என்று நினைத்தேன்.
என் அம்மாவிடம் பேசிவிட்டு அவள் சிரித்த முகத்துடன் வெளியே வந்தாள். அவள் சிரிப்பும் அழகாக தான் இருந்தது இருந்தாலும் அந்த சிரிப்பிற்கு பின் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையே. அவள் வெளியே சென்றதும் நான் என் வீட்டினுள் சென்று அம்மாவிடம் அவள் யார் எதற்கு நம் வீட்டிற்கு வந்தால் என்று கேட்டேன்.
அவள் அந்த வீட்டிற்கு புதிதாக குடி வந்திருப்பவர்களின் மகள் என்று அம்மா கூறினார்கள். அதெல்லாம் சரி இப்போ எதுக்கு அவள் நம் வீட்டிற்கு வந்தால் என்று கேட்டேன். சும்மா வந்து பேசிட்டு போறா டா. அந்த நிமிடம் அவள் என் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டால்.
நண்பனும் கிளம்பினான். இரவும் முடிந்தது. இரவு முழுவதும் முழுநிலவு போன்ற அவளது முகம் என் கண்ணுக்குல்லையே இருந்தது. மறுநாள் இரவு வந்தது நான் வீட்டின் வெளியே அவளை பார்ப்பதற்காக நின்றுக்கொண்டு இருந்தேன்.
அவளும் நேராக என் வீட்டிற்கு வந்தால். நான் அவளிடம் மன்னிப்பு கேட்டேன் எதற்கு என்று அவள் கேட்டால். நான் உன்னையே பார்த்துக்கொண்டு இருந்ததற்கு தான் என்று கூறினேன். ஏன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்திர்கள் என்று கேட்டால். நீ ரொம்ப அழகா இருக்க, எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு என்றேன். அதற்கு அவள் பதில் கூறவில்லை ஒரு சிறிய சிரிப்பு சிரித்தால். அவளிடம் நன்றியும் கூறினேன் எதற்கு என்று கேட்டால். என் அம்மாவிடம் இதை பற்றி கூறாமல் இருந்ததற்கு என்று கூறினேன். சரி என்று சிரித்த படியே தலையாட்டி உள்ளே சென்றால்.
அவள் உள்ளே சென்று அம்மாவிடம் பேசிவிட்டு வெளியே வந்தாள். நான் போய்ட்டு வரேன் என்று என்னிடம் கூறினால். நான் உள்ளே சென்று அம்மாவிடம் கோபமாக கேட்டேன் அவள் எதற்கு அடிக்கடி வருகிறாள் என்று கேட்டேன். டேய் அவ ரொம்ப நல்ல பொண்ணு டா என்று என் அம்மா அவளுக்கு சான்றிதழ் கொடுத்தார்கள். அப்போவே என் அம்மாவிடம் அவள் தான் வருங்கால மருமகள் என்று கூறிவிடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அதை கூறியதும் அம்மா என்னை அடிப்பார்கள் என்பதால் கூறவில்லை. என் அம்மாவிற்கும் அவளை பிடித்துவிட்டது. அதனால் தினமும் அவளை பார்த்து பேசினேன் எங்களுக்குள் காதல் உதித்தது. முழுநிலவு போன்ற அவள் முகத்தை காண முடியாமல் என்னால் இருக்க முடியவில்லை. அமாவாசை அன்றும் எங்கள் வீட்டிற்கு முழுநிலவு வந்தது அவள் ரூபத்தில். என்னை பொறுத்த வரை அவள் ஒரு முழுமதி.