நவீன் வைத்தியம்- ஒரு கண்ணோட்டம் -நகைச்சுவை
நோயாளி : ஐயா டாக்டர் ஐயா ரெண்டுநாளா ஒங்க
க்ளினிக்குக்கு வந்து அல்லாடறேனுங்க
வயிற்று வலின்னு ................. மருந்து
ஏதும் கொடுக்கல ; என்ன செரியா தொட்டு
சேக்கும் பண்ணல ; ஆனா ஏதேதோ டெஸ்ட்
னு எக்ஸ்-ரே வகைரா . ரத்த பரிசோதனைனு
பண்ணிக்கிட்டிருக்கிறீங்க ................ஐயா
நீங்க எப்போ என்னனு கண்டுபிடிப்பீங்க
எப்போ மருந்து தருவீங்க எப்போ எனக்கு
வலி குறையும் டாக்டர் ஐயா.......................
எங்கப்பா காலத்துல , உங்க அப்பா டாக்டர்
நாடி பாத்து, நாக பாத்து, வயிர அமுக்கி பாத்து
மருந்து தருவாரு............வியாதி பறந்து போகும்னு
எங்க அப்பர் சொல்லுவாங்க .....................
டாக்டர் : பொறுமையா இருப்பா............... நானு இந்த கால
நவீன டாக்டர் ................இப்படித்தான்
வைத்தியம் தருவோம்.....................
நோயாளி : ஓஹோ இந்த காலத்துல மெஷீன்னு தான் டாக்டர் போல !
நாடி பார்த்து ரோகம் தீர்க்கும் வைத்தியம் நாட்டில்
ஈடுபடலையோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அதில் காசு எது ஐயா
அதனால்தானோ..................................
டாக்டர் (நர்ஸை பாத்து ) இந்த ஆளு ஜாஸ்தி பேசறாரு ஒரு வைட்டமின் ஊசி குதி
சீக்கரம் வீட்டுக்கு அனுப்பு
நர்ஸு : சரிங்க டாக்டர் அப்படியே
நோயாளி இப்போ வாயடைத்து போறான்