பேனா
சிந்தனை கிழிக்கும் பேனா!
உண்மை மை எடுத்து
நேர்மை மை எழுத்தால்
கடமையை வெளிக்காட்டும் பேனா!
முள்ளிலும் சொட்டும் பேனாவின் இரக்கம்!
எனக்கோ அதன்மீது எந்நாளும் கிறக்கம்!
நீயா நானா என்பவரை
தானாய் விழவைக்கும் பேனா!
உன் நாவால் நான் வாழ்ந்தேன்!
என் நாவால் இதை ஒப்புகிறேன்
பேனா முள்ளால் கிழிந்தவரும் உண்டு!
வீழ்ந்து எழுந்தவரும் உண்டு!
நீயின்றி நானா!
பொய் சொல்லாது என் பேனா!
ஒரு நாளும் உனை நான் மறப்பேனா!

