பெண்ணே - நீ ,அன்றும், இன்றும்
பெண்ணே, இந்திய பெண்ணே
உன் வாழ்க்கைப் பாதையில்
எத்தனை எத்தனை போர்க்களங்கள்
அத்தனையும் தாண்டி நீ
இன்று வெற்றிப் பாதையில்
சுதந்திர பறவையாய் இருந்திட
பார்க்கிறாய் ஓரளவு வெற்றியும்
அடைந்துள்ளாய் ஆயினும்
நீ போகும் தூரம் இன்னும்
வெகுதூரம் வெகுதூரம் பெண்ணே !
அன்று நீ உன் வீட்டிலேயே
அடைப்பட்ட கூண்டு கிளி
உனக்கென்று சுதந்திரம் ஏதுமில்லை
பூப்பு எய்திய பின்
வீட்டு வாசப் படி கூட
தாண்ட உனக்கு அனுமதி இல்லை
பத்து வயதோடு உன் பள்ளிப் படிப்புக்கு
முற்றுப் புள்ளி மீதி படிப்பு வீட்டிலேதான்
இன்னும் கொடுமை, பெண்ணே
சின்னஞ் சிறுமியாய் இருக்கையிலேயே
உனக்கு விவாகமும் செய்துவைத்தார்
விதி வசமாய் பூப்பெய்தும் முன்னே
பெண்ணே நீ விதவையாயும் ஆக்கப் பட்டாய்
பூவும் பொட்டும் இழந்தாய்
கூந்தல் வழிக்கப் பட்டாய்
கொடுமை கொடுமை
பூத்துக்குலுங்கும் வயதினிலே
உனக்கு வெள்ளை உடுப்பு தந்து
உருக்குலைத்து வீட்டில் வைத்தார்
இது கொடுமையான இறந்த காலம்
இந்த கொடுமைக்கெல்லாம் எதிர்நீச்சல் போட்டு
இன்று நவீனப் பெண்ணாய்
உன் தாய் மடியில், பாரதத் தாய் மடியில்
குலாவி வருகிறாய்
இன்று உனக்கு சுதந்திரம் உண்டு
ஆண்மகன் போல் பள்ளி,கல்லூரி
மேல்படிப்பு உண்டு அதன்பின்னே
ஆண்மகன் போல் அலுவலகம் சென்று
ஆணுக்கு நிகராய் பனி செய்கின்றாய்
ராணுவத்திலும் பணிபுரிகிறாய்
விமானம் கூட ஒட்டுகின்றாய்
நீ இன்று செய்து காட்டாத
சாகசங்கள் ஏதும் இல்லை
பெண்ணே, இத்தனை இருந்தும்
இந்த சமூகத்தில் உனக்கு இன்றும்
பூரண பாதுகாப்பு இல்லை
கொடியவர், வீணர் கண்களில்
பட்டுவிட்டால் உன்னை
கலங்க விட்டு ஏன்
கசக்கி அழித்தும் விடுவார்கள்
பாதகர்கள் !
இந்த இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டில்
நீ வெற்றிப்பாதையில்தான் இருக்கின்றாய்
பாரதத்தாய் உனக்கு துணை இருப்பாள்
உனக்கு கைகொடுத்து தூக்கிவிட
எத்தனையோ அருமை சகோதரர்கள் உண்டு
கவலை விட்டுவிடு
பெண்ணே இனி உனக்கு பாதை
வெற்றிப் பாதை தான்