முத்தாகத் திரண்டிருக்கும்

மூடியுள்ள விழியினிலே முத்தாகத் திரண்டிருக்கும்
திரண்டிருக்கும் கண்ணீரும் சிந்திடவே காத்திருக்கும்
காத்திருந்த கன்னிமனம் காதலனைத் தேடிநிற்கும்
தேடிநிற்கும் பொழுதினிலே தேன்மலரும் உளங்கவரும்
உளங்கவர்ந்த காரணத்தால் உவகைபெருகும் இதயத்தில்
இதயத்தில் மதுசுரக்கும் இனிமையிலே முகம்சிவக்கும்
முகம்சிவந்த கவினழகை முகில்கண்டு வியந்திருக்கும்
வியந்திருக்கும் அவ்வேளை மெல்லிடையாள் விழிமூடும் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-17, 3:12 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 56

மேலே