நீ மழையோடு குடைபிடித்து வந்த தேவதையா

சட்டென்று வானில் இருந்து மேனியில் பட்டுதெறித்த
ஒற்றை மழைத்துளி
ஜில்லென்ற மழைக்காற்று
தூறலில் நனைந்த மண்ணின் வாசனை நுகர்வு
மயில் தோகை விரித்த அக்கணங்கள்
செடியும் கொடியும் பூவும் கிளையும் அசையும் அவ்வேளை
குடைபிடித்து தென்றலாய் நடந்து வந்த
"தேவதையின் வருகை
உன் பார்வையில் ஜில்லென்ற உணர்வு
உன்னில் ஏதோ நறுமண வாசனை நுகர்வு
உன் தாவணி தலைப்பு லேசாய் பறந்த நிகழ்வு
மென்மையாய் அசைந்தும் நடந்தும் வந்த அவ்வேளை
நீ மழையோடு குடைபிடித்து வந்த தேவதையா !!!