படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஆணிற்குப் பெண்
சளைத்தவள் அல்ல
என்றே பறையடி !
----------------------
இக்கலை மட்டுமல்ல
எக்கலையும் வரும்
எம் பெண்களுக்கு !
--------------------
மாற்றுங்கள் பெயரை
தப்பாட்டம் அல்ல
சரியாட்டம் !
-------------------
புது இராகம்
இசைக்கும்
புதுமைப்பெண்கள் !
---------------------
எந்த ஒலியும்
ஈடாகாது
பறை ஒலிக்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (11-Mar-17, 11:26 am)
பார்வை : 86

மேலே