நினைவுகள்
நினைவுகள் - 1
------------------------
நினைவு தெரிந்த நாள் முதல்
நனைகின்றேன் நினைவுகளில்,
நன்னிலம் வந்த
நாள் முதல் நினைவில்லை.
நவில்கிறேன் நனைந்த
மழைத்துளி முதல்,
கருவானம் கவிழ்ந்து
கருங்குழல்
நனைந்த நாள் நினைவிருக்கிறது,
வெயிலில் வேய்ந்த வெட்டவெளியில்
விளையாடிய
வினைகளற்ற
வேடிக்கைகள்
வந்துபோகின்றன,
மங்கிய மாலைவேளையில்
மயக்கும் மாதவன் உரையில்,
மங்காத வேதமுழக்கம்,
மறையா நினைவுகளாக
என் மனத்திரையில்,
கோவில் திருவிழாவில்
கொண்டாடிய கோலங்கள் யாவும்,
கோளத்தில்(உலகத்தில்) உள்ளவரை
கொக்கரிக்கும் கொள்ளை இன்பங்கள்,
அறியா பருவத்தில்,
அ,ஆ வனா அறிய,
அழுதுகொண்டே
அறிவுக்கூடத்திற்கு ஆர்ப்பரித்து
போனது அழியா சுவடு,
,,,,,
ஆசிரியரிடத்தினில் வாங்கிய
அடியும், பாராட்டுதலும்,
பொன்னெழுத்துகளில்
பொறிக்கப்படவேண்டிய
பொக்கிஷங்கள்,
,,,,,
விடுமுறைகளில்
விழும் வெயில்
முழுவதும்
மேனியை அடைந்தால்
மட்டுமே விடுமுறைக்கு
மதிப்பு,
,,,,
புழுதிகளில் புரண்ட
புலன்கள்
பசுமை போர்த்திய
நிலங்கள்,
,,,,,,
தொடரும்....