நாடி வந்த நட்பு --- வெண்கலிப்பா

கடலலையில் கால்நனைத்தே கரையேறும் மழலைகளின்
மடலெல்லாம் ஈரமாகி மறைந்ததுவும் போகிறதே !
விடலைகளின் இன்பமான விளையாட்டில் கடலன்னை
உடலெல்லாம் உணர்வாகி உதிர்க்கின்றாள் புன்னகையும் .
நடக்கின்றார் நாடுகின்றார் நட்பு .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Mar-17, 4:27 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 55

மேலே