உன் மடியில்
ஒரே ஒரு முறை
அம்மா என்று
உன் வாயால் சொல்லு மகனே .....
எல்லோரும்
இழுத்து கொண்டிருக்கிறது என்று
பால் ஊத்துகிறார்கள்
சிலர் மண்ணை கரைத்து ஊத்துகிறார்கள்
இன்னும் சிலர் என் குரல் வளையை நெரிக்கிறார்கள்
நான் மூச்சு விட சிரமப்படுகிறேன் என்று
என் மீது கருணை கொண்டு
யாருக்கும் புரியவில்லையா ?
நான் என் மகனுக்காக தான் இந்த உயிரை கையில் பிடித்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று .....
என் மகனே ,,,,,
நீ வந்ததும்
உன் குரலை கேட்டபடியே
உன்னை பார்த்துக் கொண்டே
உன் மடியிலே உயிரை விட்டுடணும்
சீக்கிரம் அம்மாகிட்ட வா என் செல்வமே.....
கண்ணுக்குள்ளயே இருக்க பா ......
நீ வராமல் நான் போக மாட்டேன் .....
உன் மடியில தான் என் உசுரு போகணும் ..............................................
உன்னை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் .....
அள்ளி அணைத்து என் நெஞ்சொடு சுமக்க வேண்டும் .......
முத்தங்கள் ஆயிரம் தர வேண்டும் ........
உன்னிடம் இருந்து முத்த மழை பெற்று கொண்டே இருக்க வேண்டும் ..........
நீ அம்மா என்று சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை தான்
என் வாழ்வின் பொருள் .....
என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த என் உயிரே .....
பார்த்து நிதானமாக வா பட்டு ....
நீ வரும் பொழுது நான் பேச்சு மூச்சற்று கிடந்தால்
கவலை கொள்ளாதே
இறந்திருக்க மாட்டேன் .....
மயங்கி இருப்பேன் .....
உன் மடியில் என்னை எடுத்து வைத்துக் கொள்
நீ தொட்ட மாத்திரத்தில் நான் உன்னை பார்ப்பேன் தங்கம்.....
நீ என்று உணர்ந்து உன் விரலை பிடித்து இறப்பேன் மகனே .....
உன் மடியில் மழலையாய் நானும் துயில
இனிதாய் முடிகிறது எந்தன் வாழ்வும் .....
உந்தன் கண்ணில் என்னை காண
எனக்காக சிந்தும் கண்ணீர் பூரிப்பாய் உள்ளது .....
அழாதே மகனே என்னால் தாங்க முடியாது ....
ஆயிரம் வலியை தாங்கி கொள்வேன்
உந்தன் ஒற்றை துளி கண்ணீரை என்னால் பார்க்க இயலாது சாரு கிருத்திக் ......
ஆ .....
சாரு.....கிருத்திக்......