அதிர்ஷ்டம்
யாருக்கு அதிர்ஷ்டம்...??
எந்த கனவும் இல்லாமல்
ஒருவருக்கு
எதிர்பாராத சந்தோஷம்
நடக்கும் எனில்
அது அதிர்ஷ்டம்..
எவ்வித கஷ்டமும்
இல்லாமல் ஒருவருக்கு
ஒன்று நடக்கும் எனில்
அது அதிர்ஷ்டம்..
ஒருவர் தனக்கான
லட்சிய பாதையில்
சென்று கொண்டிருக்கும்
நேரத்தில் எங்கே
செல்கிறது அந்த
அதிர்ஷ்டம்...??
காதலர்கள் தான்
கரம் பிடிக்க நினைத்து
செயல் பட்டு கொண்டிருக்கும்
போது எங்கே செல்கிறது
அந்த அதிர்ஷ்டம்..??
மற்றவர்களுக்கு தான்
அதிர்ஷ்டசாலியாக
இருக்கும் பட்சத்தில்
தனக்கென்று வரும்பொழுது
எங்கே செல்கிறது
அந்த அதிர்ஷ்டம்...??
நம் வாழ்க்கையில்
பாதி காலம்
அதிர்ஷ்டம் என்ற ஒன்றையே
நம்பி சென்று
விடுகிறது....