நிக்கி - கல்லுராணி

ஏண்டி மருவளே தாமரை, உனக்கு தலப்பிரவசம் இன்னும் ஒரு மாசத்தில. நம்ம குடும்ப சோசியரு ரட்டைக் கொழந்தைதான் பொறக்கும்னு சொல்லிருக்காரு. ரண்டும் பெண் கொழந்தைங்கன்னும் சொன்னாரு. ஒடம்ப நல்லா பாத்துக்கா. ஆமா, உங்க கொழந்தைங்களுக்கு என்ன பேருங்கள வைக்கப் போறதுன்னு நீயும் எம் மவன் முத்துவும் முடிவு பண்ணீட்டீங்களா?
@@@
அத்தை, நம்ம சோசியர் சொன்ன உடனே நானும் உங்க மகனும் குழந்தைகங்க பேர முடிவு பண்ணீட்டம்.
@@@@
அத ஒடனே சொல்லுடி தாமரை. உனக்குப் பொறக்கப் போற எஞ் செல்லப் பேத்திங்க பேருங்களக் கேக்க ரொம்ப ஆசையா இருக்கறண்டி தாமரை.
@@@@@@
அத்தை, உங்களுக்கு நல்லாத் தெரியும் நானும் உங்க மகனும் தீவிர சினிமா ரசிகர்கள். இப்ப எங்களுக்குப் பிடிச்ச புது நடிகை நிக்கி கல்ராணி. ஒரு கொழந்தைக்கு நிக்கி-ன்னும் இன்னொரு குழந்தைக்கு கல்ராணி - ன்னும் பேரு வைக்கலாம்னு முடிவு பண்ணீட்டம் அத்தை.
@@@@@
என்னது நிக்கி -கல்லுராணியா? அந்த ரண்டு பேருங்களுக்கும் என்ன அர்த்தம்னு அப்பறஞ் சொல்லு. இந்திப் பேருங்களத்தான் எல்லாத் தமிழங்களும் அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. ஊரோட ஒத்துப்போறதுதான் நல்லது தாமரை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Nkki = Victory of the people
(Indian, English origin).

Galrani = Sound or wave (Hebrew origin)

எழுதியவர் : மலர் (11-Mar-17, 6:30 pm)
பார்வை : 329

மேலே