ஜெனாளன்

இந்த உலகில்
சிலருக்காக நானும்
உருகினால் தப்பில்லை

அந்த சிலரும்
எம்மை அழவும் வைத்து விட்டு
சென்றாலும்
அவர்களுக்காக
கண்ணீரில் சுமக்கிறேன்

உன் நினைவை சுமந்த
இதயம் இன்னும்
வலியை சுமக்குதடா

விதையாய் வளர்ந்திருக்கும்
உன் நினைவுகளின்
வாசம் நித்தம் என்னை
கொள்ளுதடா

உன்னுடன் கடந்து வந்த
நாட்களில்
எங்கயோ தொலைந்து போனேன்

என்று ஏங்கயதும் உண்டு

இரவு நேர கனவிலே
உன்னோடு உரையாடியா
அந்த தருணத்தில்
நீ என்னை திட்டியது
அந்த நினைவுகள்
உறங்கினாலும் விழிகளுக்குள்
உறக்கம் இல்லையாட


அன்று கூறினாய்
என்னோடு நிழல்லாக வருவாய் என்று
நீ கூறி சென்றது பொய்யா

அன்று என்னை திட்டியது பொய்யா

என்னோடு நீ இல்லாத
நாட்களும் என்னை
ஏளனம் செய்யுதடா

உன் நினைவுகளில்
என் உறக்கத்தை தவறவிட்டேன்

வாழ்க்கை இதுதானா

உன்னை தொலைத்ததுக்கு

எழுதியவர் : வினோஜா (12-Mar-17, 7:21 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
பார்வை : 230

மேலே