பெண்

சமைக்கவும்,சந்ததியை உருவாக்கவும் மட்டும் பிறந்தவள் அல்ல நான்!..

சாதனையையும் சவால்களையும் சற்றும் சாலைப்பின்றி
சந்திக்கவும் சாதிக்கவும் பிறந்தவள் நான்!.

விண்ணுலக தேவதைகள் அல்ல நாங்கள் - ஆனால்
அவ்விண்ணிற்கே செல்லும் தேவதைகள்!..

தேவதைகளுக்கு அர்ச்சனை செய்யவேண்டியது தேவாலயங்களில் மட்டுமல்ல.
ஒவ்வொரு வீடுகளிலும்தான்!.
பெண்கள் பிறந்த ஒவ்வொரு வீடும் தேவாலையமே!..
பெண்ணின் சிறப்பை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது தேவாலயம்!..

பெண்ணாக பிறந்ததர்க்கு பெருமைகொள்ளுங்கள்!..
பெண்களுக்கு மதிப்பளியுங்கள்!..
பெண்களின் மகத்துவத்தை போற்றுங்கள்!..

பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்..

எழுதியவர் : (12-Mar-17, 7:37 am)
சேர்த்தது : Viya Drizzle
Tanglish : pen
பார்வை : 108

மேலே