கற்பனையால் செதுக்கிய கணவன்

கற்பனையால் செதுக்கிய கணவன்

எட்டாத தூரத்திலிருக்கும்
அந்த வானத்தையே
எட்டிபிடித்து...
மேக மெத்தையில் கனவுகளை இழுத்துபோர்த்தி உறங்குகையில் பெண்ணானவள்
கற்பனைகளுக்கு உயிருட்டுகிறாள்!!!

மனக்கோட்டை கட்டி வாழும் பெண்களின் உள்ளங்களில் பெரும்பாலும்
வருங்கால கனவனையே கற்பனையால் செதுக்கி செதுக்கி சித்திரமாக்கி நெஞ்சோரத்தில் பதுக்கி வைக்கிறாள்...

அவைகள்...

தூங்குகையில் முன் நெற்றியில் நடனமாடும் ஒற்றை முடியை காதோரம் சொருகி தினமும் போதுமான அளவு
என்னை ரசிக்க வேண்டும்...

தாமதமாகி எழுந்த குற்றவுணர்வில் நான் பரபரக்க
'ஒருநாள் நான் எழுப்பினால் உலகம் நின்றுவிடாது'
என அன்பால் அதட்டி காப்பியை என் முன் நீட்ட வேண்டும்...

சமையல் நல்லாயிருக்கும் பட்சத்தில் 'அருமை' என்று ஒருமுறையாவது மனதார பாராட்ட வேண்டும்...

'சாப்பிட்டியா' என்று கேள்வியோடு நிறுத்தி விடாமல் எனக்கு முன்
தட்டிட்டு முதல் வாயை
அவனே ஊட்டிவிட வேண்டும்...

அர்த்தமற்ற ஆயிரம் சண்டைகளின் தீர்வு அர்த்தமுள்ள ஒரேயொரு முத்தமாய் அமைய வேண்டும்...

தொலைபேசியை தொலைவிலே வைத்துவிட்டு தொனதொனவென என்னிடம் மட்டுமே பேச வேண்டும்...

என் நினைப்பு வரும்போதெல்லாம் இதழ்விரித்து புன்னகைத்து மேலும் என் ஞாபகங்களை
அதிகபடுத்தி கொள்ள வேண்டும்...

தள்ளிவைத்த வேதனையில் தலையணை சோக கீதம் பாட...
பல நேரங்களில் அவனது மடியே என்னை தாங்கும் தலையணை ஆகவேண்டும்...

என் சிணுங்களுக்கும், முணங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்...

தேவை என்று குறிப்பிடும் முன்பே என் தேவைகளை அறிந்து
சேவை புரிய வேண்டும்...

என்னை மட்டுமல்லாமல் எந்தன் இம்சைகளையும் அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்...

தோல்வியால் நான் சாயும்போது தோள் கொடுக்கும் தோழனாக வேண்டும்...

தெரியாது என நான் பின்வாங்கும் செயல்களில் 'தெரிந்துகொள்' என்று தானே கற்றுக் கொடுக்கும் ஆசானாக வேண்டும்...

வலி எனது என்றாலும், துடிப்பது அவனாக வேண்டும்...

நான் சொல்லாமலே சின்ன சின்ன உதவிகளை அவனது தலைமையிலே
நடந்திட வேண்டும்...

என் கோபங்கள் எல்லாம் அவன் மீதுள்ள அதிகப்படியான அன்பின் வெளிப்பாடே என்பதை சொல்லாமலே உணர வேண்டும்...

எனக்கு பிடிக்காததை செய்திருந்தாலும் அடுக்கடுக்கான பொய்களை விடுத்து நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்...

நகைகளை கொண்டு அல்லாமல் வெறும் புன்னகையாலே என்னை மயக்கிட வேண்டும்...

எத்தனை வேளைகள் இருந்தாலும் எனக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி கொஞ்சி பேசி
கைக்கோர்த்து நடந்திட வேண்டும்...

என் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி காதைதிருகும்
தாயாக வேண்டும்...

அவன் ரசித்து படிக்கும் ஒரேயொரு அர்த்தமான கவிதை நானாக வேண்டும்...

நான் விழும்போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் மறுதந்தையாக வேண்டும்...

பெண்மையையும், மனைவியின் திறமைகளையும் மதிக்க தெரிந்த கணவனாக வேண்டும்...

காலக்கெடுவோடு சுமக்கும் கருவறை விடுத்து
நாளறை கொண்ட இதயத்தில் ஐந்தாவது அறை ஒன்றை படைத்து அதில் இப்படிபட்ட கணவனை சுமக்கும் வரம் வேண்டும்...

ஆண்களே,
நீங்கள் எதிர்பாக்குற மாதிரி வரப்போகும் சீதையாகிய மனைவியின் மனதில்
"வரும் கணவன் ராமனாக இல்லையென்றாலும் பரவாயில்லை ராவணாக இருக்க வேண்டாம்" என்பதே என்று நீங்கள் அறிவீர்களா???

இப்படிபட்ட கணவன் உங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் இனிமேல் வந்தாலும்
தயவுசெய்து
கோபத்தையும், சந்தேகத்தையும் கொண்டு அவரது விலைபேசமுடியாத
அன்பை மட்டும்
இழந்து விடாதீர்கள்...
#எனது சின்ன வேண்டுகோள்#


#கற்பனை மட்டுமே#

#ஸ்ரீதேவி#


Close (X)

23 (4.6)
  

மேலே