புதுக்கவிதை

நேர்மையைப் பறிகொடுத்து பெறும் இலாபம் --- புதுக்கவிதை


கண்ணீர்க் கடலில்
கரையேற தவித்துக்
கொண்டிருக்கும் தளிர்களுக்கு
காகிதக் கப்பல்
விட்டு மகிழ நேரமேது !! ( 11 )


பசியும் பட்டினியும்
நிலையாக இருக்கும்
சமுதாயத்தில் நம்மின்
நேர்மை விலை பேசப்படுகிறது
அநியாயமாக ...!
நேர்மையைப் பறிகொடுத்து
பெறுகின்ற இலாபம்தான் என்ன !! ( 26 )


வாழ்க்கையே தெருவில்
கண்ணாமூச்சி ஆடுகிறது !
முளைக்காத பயிரும்
முற்றாத கதிரும்
இருப்பதில் என்ன இலாபம் !! ( 37 )


நியாய விலைக் கடைகளில்
வரிசையில் நிற்கும்
மக்களினம் .... !!
நிம்மதியாய்த் தூங்குகின்றது
அரசாங்கமும் சட்டமும் !!! ( 48 )


ஓயாத அலைகளாய்ச்
சுழல்கின்றது வாழ்க்கை ...
ஏழையும் பணக்காரனுமாக
இரட்டை வேடத்தில் ...!
இருப்பவனுக்கோ கொடுக்க
மனமில்லை இங்கு .
இல்லாதவன் போவான் எங்கு !! (63 )


தீக்குசிகளை அடுக்கிப்
பெற்ற கடன் தீர்ப்பானா ! -- இல்லை
செங்கல் கற்களைச்
சுமந்து செல்வானா !
துளிர்க்கும் போதே இவர்கள்
கருகிய சோகமென்ன !!!! ( 78 )


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Mar-17, 10:53 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 68

மேலே