என் இதய அலையோடு ஓயாத வரிகள்

என் இதய அலையோடு ஓயாத வரிகள்

என் இதய அலையோடு ஓயாத வரிகள் :

அதிகாலை மார்கழி காற்றில் உடை நனைக்கும் கூந்தல் ஈரம் ,
லேசான பனியோடு குளிர்காற்றும் எனைத் தீண்டும்,
ஆதவன் காணாது மலராத பூவே.
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடிமேலே ஓர் இடம் வேண்டும்.

பனிதுளியாய் நான் பிறந்திருந்தால் ஒரு நொடியில் கரைந்து மறுபிறவி எடுத்திருப்பேன்,
அதிகாலை பொழுதுகளில் புல்வெளியோடு படர்ந்திருப்பேன்,
ஆதவனே அதிகாலை பொழுது மட்டுமே என் வாழ்வோ,
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா...

முதல்முறை தன் உள்ளம் கவர்ந்தவள்
அவள் விழியோடு பேசும் ஆயிரம் கவிதைகள்
நித்தமும் ஓயாமல் அவளது நினைவுகள்
நேரில் காணும்போது சொல்லிட ஆசை,
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி...
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்லத் துடிக்கின்றதே காதலே....

இருவரின் உடல்பொருள் வேறு
உதிரங்கள் அதுக்கூட வேறு
என் உயிரோடு ஆவியாய் கலந்திட்ட ஆண் திமிரே
வேதியியல் மாற்றம் பெண்ணோடும் உண்டு,
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி...

கண்களின் வழியே களவுப் போன இதயங்கள்
கனவிலே உலாவி திளைத்த நிமிடங்கள்
புதியதோர் உறவுகளில் நினைவிழந்த காலங்கள்
நேசங்கள் சொல்லி பழகி கிடக்க காதல்,
நீல வானம்
நீயும் நானும்
கண்களே ஆசையாய்
கைகளே ஆசையாய்....

சொந்தங்கள் இல்லா இதயங்கள்
வாழ்வில் உறவுக்காய் ஏங்கும் உயிர்கள்
கிளைகள் உதறிவிட்ட மலர்கள்
சிறுபிள்ளை என்றும் பாராத கல்மரங்கள்
முதுமையில் கைவிட்ட வாரிசுகள்,
பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

காலங்கள் படுத்திடும் பாடு
இருநெஞ்சங்கள் வேதனையில்
சிறிய புரிதலில் பிழையால் பிரிவில் வாடி
எங்கே எங்கே எனத் தேடி திரியும் விழி
உன் முகம் காணும் ஓர் நொடிக்காக,
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடி பார்த்தேன்...
கடல் மீதிலே துளி வீழ்ந்ததே அதை தேடித் தேடி பார்த்தேன்.....
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே....

வெறுமையில் வறுமையான வாழ்வே
உலகத்தின் உதிரமான காதல் வறட்சியால்
என் இதயத்தின் ஓசையை இழக்க நேரிடுமா
துன்பத்தில் உழன்று ஓய்ந்த போது
எங்கேயோ இருந்து ஒரு குரல் சத்தமின்றி,
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காது நான் பூக்கள் நீட்டுகிறேன்.....
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே....

எல்லாமும் இழந்து
காலத்தில் கரைந்து
நதி வெல்லம் போல புரட்டிப் போன துயரங்கள் மறக்க
சுருக்கு கயிற்றுக்கு இரையாகி போகாது
எழுந்து நின்றேன் ஓர் நாள்,
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே....


Close (X)

5 (5)
  

மேலே