விவசாயம் - வியாபாரம்
விவசாயம் --- வியாபாரம்
காவிரியாறு கடலென ஓடியது - அந்தக்காலம்
காவிரியாறு வற்றிப்போனது - இந்தக்காலம் .
நெல்லும் பயிரும் நீரும் இருந்தது -அந்தக்காலம்
விவசாயி தற்கொலை நடக்கிறது - இந்தக்காலம்
வேளாண் மக்கள் வாழ்ந்து வந்தனர் - அந்தக்காலம்
வியாபாரம் ஆனது விவசாயமே -- இந்தக்காலம்
ஆற்றுநீரில் மீன்கள் துள்ளியது - அந்தக்காலம்.
சோற்றுக்கே இங்கு திண்டாடுவது --- இந்தக்காலம்
பாலும் தேனும் மிகுந்து இருந்தது - அந்தக்காலம்
பட்டினியால் மக்கள் அவதிப் படுவது -இந்தக்காலம்
பருவமழையோ கொட்டித் தீர்க்குமே - அந்தக்காலம்
பஞ்சம் தன்னில் பரிதவிக்குமே - இந்தக்காலம்
வீட்டிற்கொரு மரம் வளர்ப்பது - அந்தக்காலம்
வீடு கட்ட மரத்தை அழிப்பது - இந்தக்காலம்
ஆலையின் புகையும் ;வாகன புகையும்
அதிகம் இல்லாது இருந்தது -அந்தக்காலம் .
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்