ஆறாம் விரல் --- புதுக்கவிதை

பிடிக்கின்றார் கைகளிலே புகையைத்
தடுக்கின்ற பெற்றோர்கள் தரையில்
கெட்டுப்போய் நிற்கின்றார்
சமுதாயத்தில் இழிவாக
ஆறாவது விரலாகும் நஞ்சு !!


புதைகிறதே புகைத்ததனால் உடலும்
கருகுகிறது மலராமல் குடலும்
நெருப்பாகிச் சுட்டெரிக்கும்
நெருங்காதீர் வாழ்வினிலே
விரல்களுமே போதுமடா ஐந்து !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Mar-17, 4:44 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 77

மேலே