இனி நட்பு மட்டும் தான் AUV
உன்னை பார்த்த உடன் காதல் கொள்ளவில்லை
ஆனால் எப்போது காதலானேன் என இன்று வரை தெரியவில்லை
பல நாள் நீ செல்லும் வழி
எல்லாம் தவம் கிடந்துள்ளேன்…………
உன் ஓரப்பார்வைகளில் ஒரு
முறை விழ மாட்டேனா என
தவித்துள்ளேன்………………..
உன் சைகைகளை உன்னை விட
அதிகமாக நான் ரசித்தேன்……………..
உன் மேல் அளவற்ற காதல் கொண்டேன்
அதை உன்னிடம் சொல்ல ஆசை தான்
பாவம் பயம் என்ன செய்யும்………………
நெருங்கி வந்தேன் காதல் சொல்ல
தோழன் என்றாய்…………..
தனியே அழைத்தாய்
காதல் என நினைத்தேன்
நட்பு என்றாய்………..
தனி அன்பு காட்டினாய்
காதலா என்றால்
நட்புக்காக என்றாய்………..
பறிந்துரைகள் செய்தாய்
எதற்காக என்றால்
தோழமைக்காக என்றாய்………….
நட்பா ?? காதலா ??
குழம்பி தவிக்கையில் விளக்கினாய்……………….
பூவிர்க்கு காம்பின் மீது
நட்பா ?? காதலா.??
மழைக்கு மேகம் மீது
நட்பா ?? காதலா.??
பூமிக்கு வேர்கள் மீது
நட்பா .?? காதலா.??
தவறு என் மீது தான்
மன்னிப்பாயா………………………….
காதல் வென்றிருந்தால்
ஆகாயம் தலையில் இடிக்க ஆடி இருப்பேன்………………..
நட்பு வென்றது இதுவும்
மகிழ்ச்சிதான்…………………
நல்ல காதலனாக
இருந்திருப்பேனா தெரியவில்லை….
நண்பன் என்றாயே அதர்காக வேனும்
நல்ல நண்பனாக இருப்பேன்
வாழ்வின் இறுதி வினாடி வரை……………………