உன்னுடன்

பார்ப்பதற்கு அழகாக இருந்தோம்
கடை தன்னில் வாங்கினான்
அணிந்து பார்த்தான்
இருவரையும்
கன கட்சிதமாக
வாங்கி சென்றான்
சென்ற இடமெல்லாம்
சேர்ந்தே சென்றோம்
ஒரு நாள்
நீ
இறக்க (அறுந்து போக )
ஒதுக்கி விட்டான்
இருவரையும்
போகிற போக்கில்
குப்பைத்தொட்டியில்....
உன்னையும் என்னையும்
இப்படிக்கு,
உன்
காலணிகள் ....