தமிழ் பிரதீப் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் பிரதீப் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 50 |
நிறம் மாறாத ரோஜா (ராஜா)
உன்னில் என் நினைவு இருக்கும் வரை
காத்திருக்கிறேன்.
என்றாவது நீ வருவாயென,
நம் காதலும் கடந்து போக....
உன்னில் என் நினைவு இருக்கும் வரை
காத்திருக்கிறேன்.
என்றாவது நீ வருவாயென,
நம் காதலும் கடந்து போக....
கவிதை உணர்த்தும் பொருள் :
க- கருத்து
வி- விதை
தை- தைரியம்
கருத்துக்களை விதைக்கும் தைரிய புத்தகம்-
குறுகி கவிதை என்றானதால்-
இன்று விதைக்கிறோம்,
கருத்துக்களை வீரியமாக-
என்றாவது விழைந்திடும்
என்ற நம்பிக்கையில்.
மதங்கள் தாண்டி காதல் செய்வது சரியா? அது சாத்தியம் ஆகுமா ?
திரு- வாழ்வாங்கு வாழ் மக்களை கொண்டது என்பதை உணர்த்துமாம் திரு,
நெல்- வந்தோர்க்கு இல்லை என்று சொல்லாது பசியாற சொல்லுமாம் நெல்
வேலி- உள்ளிருப்போர்க்கு உபயமே அன்றி அபாயம் இல்லை என்கிறதாம் வேலி
இதுவே திருநெல்வேலியின் சிறப்பு
இதற்கு இணை என்ன இருக்கு
உன் பெயரை சொல் உன்னை பற்றி சொல்கிறேன்;
என்பதற்கு இணையாக,
பெயரிலேயே அனைத்தும் இருக்க ஆராய்வதெதற்கு...
இதயமே நினைக்காமல்
அவள் நினைவுகள்,
எனக்குள் தூக்கமில்லை...
மௌனமே பேசாமல்
அவள் வார்த்தைகள்,
எனக்குள் தூக்கமில்லை...
இமைகளே திறக்காமல்
அவள் ரூபங்கள்,
எனக்குள் தூக்கமில்லை...
கனவுகளே வராமல்
அவள் அசைவுகள்,
எனக்குள் தூக்கமில்லை...
ஆயினும்.
என் உடலே இல்லாமல் உலாவுது
என் உயிர் _ பாவம்
அவள் நினைவுகளோடு
தூங்கிய பின்னும் _ தூக்கமில்லாமல்...
வெண்ணிலவாய் எண்ணில் வந்தவள்,
என்......
வாழ்வில் ஒளியை தந்தவள்,
என்.....
நினைவே அவள் தான் என்று நானிருக்க,
என்.....
இதய வீணை அவள் பெயரால் பாட்டிசைக்க,
ஊன் உறங்க,
என்...
உயிர் உறங்க,
நான் -
உறங்கி போனேனே,
என்...
இமை விழி மூடாமல்...
பிரிவு என்பது அனைவருக்கும்
-உண்டு
பிரிவை தேடிச்செல்பவன்
துர்பாக்கியசாலி...........
பிரிவை எதிர்த்து வாழ்பவன்
பாக்கியசாலி............
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
நம் பிள்ளைகள்
நம் தொருவில் விளையாட
எவனோ இங்குவந்து தடைபோட்டன்!
உறுதியாக ஒன்றினைந்து
இறுதிவரை போராடி
வென்றார்கள் அவர்கள்
இளம் பட்டாளம்!
அவர்களின் வாழ்வுக்கு
அவர்களே மாற்றம் போட்டார்கள்!
நாடாண்ட கும்பல்
பன்னிய அட்டுழியம்
நெருப்பாக நெஞ்சில்
இன்னும் இருக்கிறது!
என் தமிழா! இளைஞா!
பித்தலாட்டம் செய்தேனும்
நாடால துடிக்கும்
பதவிக்கு பாய்ந்துவரும்
நயவஞ்சக நரிக்கூட்டம்!
தான் செழிக்க
தமிழகம் அழிக்க
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா
நாளையும் உன் நாடும்? வீடும்?
விட்டுவிட்டதனால்..
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்!
நம் அனைவரின் உழைப்பை
தின்று கொழுக்கும் களைகள்!
தூக்கியெறி துரோகிகளை
விரட்டியடி வெறியர்களை
புதியவர்கள் இளையவர்கள்
நல்லவர்கள் நன்மைசெய்ய
மாற்றம் அமைப்போம்!
மாற்றம் வரவைப்போம்!
நல்ல தமிழினம் அமைப்போம்!
நம்மை புதிதாக வளர்ப்போம்!