அம்மா

ஒரு தெய்வத்தின் மடியில் நான்
கண் துயில
பத்து விரலினை பற்றியே
நடை பயில
அன்பெனும் நிழலினில்
குடி பெயர
உன் உதிரம் அருந்தியே
நான் தினம் வளர
கருவறை விட்டு
இறக்கி வைத்தாய் நீ அம்மா
அடுத்த பிறவிக்கும் என்னை சுமக்க
உன் கருவறையை மீண்டும் தா அம்மா.

உன் முந்தானை வாசம்
தொட்டிலோடு வீசும்
நாசி வழியே
உயிரும் கூசும்

சேய் என்ற பாசம்
குறையாத நேசம்
உனை போன்ற ஒரு தாயை
கண்டதில்லை தேசம்

கடவுள் பூமிக்கு
வருவதாய் நீயும் கதை சொன்னாய்
ஒரு கடவுள் வந்து
கடவுள் கதையை சொல்லும் அழகை
நான் கண்டேன்

இல்லாத பேயை, அல்லாத பூச்சாண்டி
எல்லோரையும் கூட்டி
தூங்க வைக்கும்
ஒரு நொடியில்
ஒரு தெய்வத்தின் மடியில்
கதை சொல்லும் அழகில்
இமைகளை திறந்தே
நான் ரசிப்பேன்

நிலா சோறு ஊட்டும்
முழு நிலவாய் நீ அம்மா
ஏழேழு ஜென்மம் வரைக்கும்
உன் பாத நிழலை தா அம்மா

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (18-Mar-17, 1:47 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : amma
பார்வை : 361

மேலே