உன் கயல் விழிகளால்

உன் கயல் விழிகளால்
ஒரு முறை கூட
என்னை திரும்பி பார்த்து விடாதே..

எனக்கு சாதிக்க எத்தனையோ
காரியங்கள் காத்திருக்கிறது..

பூலோகத்தையே அழிக்கும்
சக்தி கொண்ட
கருவேல மரங்களை
கூண்டோடு அழிக்க...

இயற்கை எழில் கொஞ்சும்
பறவை கூட்டங்களை
தன்னை கொஞ்ச வைக்கும்
ஏரி குளங்களைத்
தூர் வாரி குடிநீர் சேகரிக்க...

மனிதன் தன் அவசரத் தேவைக்கு
நான்கு வழிச் சாலை
அமைக்க வேண்டி
வெட்டி எறிந்த
உயிர் காக்கும்
மரங்களை வளர்க்க...

கல்விக் கண்ணை திறந்து வைக்க
ஆதரவில்லாத குழந்தைகளின்
எண்ணிக்கையை குறைக்க...

தன் குறை கூறி, அழுது ஆர்ப்பரித்து
இறையிடம் மன்றாடுவதற்கு
தடை போட்டு - இறைவனையும் விலை பேசி
ஆலயத்தில் நின்று
ஆண்டவனை தரிசிப்பதற்கு
இடைக்கல்லாக நிற்கும்
பணக்கார வர்க்கத்திற்கு
எதிர்ப்பு தெரிவிக்க....

என்று எனக்கான பணிகள்
எத்தனையோ காத்திருக்கையில்
நீ உன் கடைக்கண் பார்வையில்
என்னை கட்டி வைத்து
என் சிந்தையை கெடுத்து
என் மனதை அழித்து
என் வாழ்க்கையை தொலைத்து விடாதே...

எழுதியவர் : சாந்தி ராஜி (17-Mar-17, 11:10 pm)
Tanglish : un kayal vilikalall
பார்வை : 110

மேலே