கல்லறையில் பேசும் கண்ணீர்த் துளிகள்
காதல் வானத்தில்
ஆடி, பாடி சுதந்திரமாய்
வானம்பாடிபோல் பறந்துவந்தோம்
காதல் ஜோடிகளாய்
அந்தோ அன்றொருநாள்
கொடிய அந்த நாள்
ஜாதிப் போர்வைபோர்த்தி
வந்த அந்த ஜாதிவெறி வேடன்
நிராயுதபாணியாய் இருந்த
எங்களை தேடி பிடித்து
துரத்த நாங்களும்
தலை தெறிக்க ஓடினோம்
திரும்பிப்பார்த்தால் அந்த கொடியவன்
இப்போது உன்னை விட்டு விட்டு
என்னை மட்டும் துரத்தினான்
என்னை மடக்கியும் விட்டான்
தாக்கினான் அருவாள்கொண்டு
அங்கஹீனம் செய்தான்
சிறுது நேரத்தில் நான்
அங்கே தெருநாய்போல
முக்கி முனகி அடங்கிபோனேன்
ஆவி பிரிந்தது உடலைவிட்டு
அதோ அங்கே அவள்
என்னைவிட்டுப் பிரித்தனர்
அவள் பெற்றோர் ,உறவினர்கள்
அழ அழ பிறந்தகத்துக்கு
அழைத்துச் சென்றனர்
வீட்டில் குண்டுக்கு கிளிபோல்
அடைத்தும் வைத்தனர்
எனக்காகவே வாழ்ந்த
என்னவள் ஓயாமல்
கண்ணீர் சிந்துகிறாள்
என்னை நினைத்து
எனக்காக ரத்த கண்ணீர்
அவள் சிந்தும் கண்ணீர்
என் கல்லறைமேல்
வந்து சிந்துகின்றது
என் ஆவியை
எழுப்புது
இந்த அமானுஷ்ய வடிவில்
என்னால் ஒன்னும் செய்ய முடியலையே
கண்ணே கலங்காதே
அடுத்த ஜென்மத்தில்
சேர்ந்து வாழ்வோம்
என்றேன்
இது இந்த என்சொல்
அவள் காதுக்கு எட்டுமோ
இந்த ஆவியின் சொல்
இல்லை இந்த
கல்லறைக்குள்ளேயே
அடங்கி கிடைக்குமோ
ஆண்டவா உனக்கே வெளிச்சம்