யவன ராணியே வா

யவன ராணியே வா

உன் கார்மேக கூந்தலில்
மின்னும் பனித்துளிகளை
வைரங்களாக கிரீடத்துள்
பதித்துக் கொண்டிருக்கிறேன்!
உன் பார்வை மின்னலை
நூலிழை சேர்த்து
தறி நெய்கிறேன்!
உன் சிரிப்பில்
சிதறும் முத்துகளை
மாலையாக கோர்க்கிறேன்!
உன் இடையை எடை போட்டு
தங்கமாலை செய்ய
பொற்கொல்லனை தேடுகிறேன்!
சிவந்த பாதமசைய
சலங்கை சூட்ட துடிக்கிறேன்!
என் இதய சிம்மாசனத்தின்
யவன ராணியே வா!


Close (X)

3 (3)
  

மேலே