என் இறுதிமூச்சுவரை உன்னை காதலிக்க வேண்டும் 555

என்னுயிரே...

உன்னோடு நான்
கனவில் வாழ்வதால்...

உறக்கத்தை விரும்பி
பகலை வெறுக்கிறேன்...

உன்னுடன் உலாவரும்
கனவு மட்டும்...

எப்போதும் வளர்ந்துகொண்டே
இருக்கிறது...

ஒருதலை காதலில் சிறகடித்து
விண்ணில் பறந்த நான்...

இன்று சிறகொடிந்து
துடிக்கிறேனடி நான்...

நீ சொன்னது என்னவோ ஒரு
வார்த்தைதான் மறந்துவிடு என்று...

நீ ஏற்காத போதும் தனிமையில்
இன்பமாக வாழ்ந்தேன்...

உன் நினைவில்...

உன் ஒருவார்த்தை
என்னை கொன்றுவிட்டதடி...

உலா வரும் கனவு
தொடர வேண்டும் நித்தம்...

உன்னை நான் நேசிப்பது
என் விருப்பம்...

என்னை நீ வெறுப்பது
உன் விருப்பம்...

உன்னை எப்போதும் நான்
கட்டாயப்படுத்தமாட்டேன்...

உன் நினைவுகள்
எண்ணில் இல்லையேல்...

நான் நூலறுந்த
காத்தாடி...

என் ஜீவன் இருக்கும்வரை உன்னை
நான் காதலிக்க வேண்டும்...

அனுமதி கொடுப்பாயா
கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Mar-17, 8:28 pm)
பார்வை : 651

மேலே