பயணம்

இருப்பு பாதை

தொடர் வண்டி

கணக்காய் என்
பயணம்

எத்திசையில் நீ?

கேள்விக்குறியோடு

சந்திக்க,ஆவலாய்

இம்முறையேனும்

சந்திப்பேனா?

தொலைந்து போன

உன்னை தேடுகிறேன்

தேடல் கிடைத்து
முடிவுறுமா

என் பயணம்? அல்லது

தேடலிலேயே முடிவுறுமோ

என் முடிவும்.., எதுவும்

புரியாது நகர்ந்து
கொண்டே

என் பயணம் ..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (22-Mar-17, 9:51 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : payanam
பார்வை : 266

மேலே