விற்பனைக்கல்ல
நான் குழந்தையாய் இருக்கையில்
என் தாய் சொன்ன வார்த்தையையே
என் மகளுக்கு
நானும் சொல்கிறேன்
என் தகுதிக்கு மீறிய
ஒரு பொருளை
ஆசையாய் கேட்கும்
மகளிடம்
நான் கேட்டு
வாங்கிதர இயலாமல்
மனவேதனையுடன் என் அம்மா
சொன்ன
"இது விற்பனைக்கல்ல"
என்ற வார்த்தையை
நானும் சொல்கிறேன்
அதே வேதனையுடன்