சம்சாரம் எனும் மின்சாரம்

அழகே...
பெண் அற்புதமே...!
நீ
நீர்மின் நிலையமா?
அனல்மின் நிலையமா?
அணுமின் நிலையாமா?
மின்வெட்டு நிலையமா?
எதுவாயினும்
எனக்கு தேவை -நீ!
ஏனெனில்
நானொரு மின்விளக்கு...
சம்சாரம் எனும் மின்சாரம்
நீ இல்லையேல்....
என் வாழ்க்கை என்னவாகும்?
இருள்தான் சூழ்ந்திருக்கும்!