மறக்கத்தான் முடியுமா
இதயமே இதயமே
அவளை மறந்துவிடு
அவளின் நினைவுகளை
நன்கு அழித்துவிடு
உறங்க முடியாத இரவுகளும் பொறுக்க முடியாத
இதய வலிகளும்
என்னை அல்லல் படுத்துகின்றன
(இதயம் பேசுகிறது)
மறக்கத்தான் நினைக்கிறேன்
மறக்காமல் தவிக்கிறேன்
அவளின் நினைவை
அழிக்கத்தான் நினைக்கிறேன்
அழிக்காமல் வாழ்கிறேன்
எனக்கேது உறக்கம்
காதல் என்றாலே வலிதானே
இதயம் என்ன கண்ணாடியா
உருவங்கள் மாறி மறைய
பதிந்து விட்டால் அழிக்கவா முடியும்
அவளை என்னால் மறக்கவே முடியாது...
இதயமே இதயமே
அவளை மறந்துவிடு...