நன்கொடை

(பொன் குலேந்திரன் - கனடா)
மகாலிங்கத்துக்கு யாழ்ப்பாணம் கச்சேரியில் இருந்து மட்டகளப்பு கச்சேரிக்கு மாறுதல் கடிதம் வந்தபோது அவனுக்கு மனத்தில் சந்தோஷம் இல்லை. வீட்டிலும் அதை வரவேற்கமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தில், நல்லூர் எம் பியின் உதவியோடு ஆறு வருஷங்கள் யாழ்ப்பாணத்தில்; வேலை செய்து விட்டான். அரசாங்க ஊழியர் சங்க விதிகளின்படி நான்கு வருடங்களுக்கு மேல் சொந்த ஊரில் வேலை செய்வதை அவனது சங்கம் வரவேற்பதில்லை. மற்றவர்களுக்கும் சொந்த ஊரில் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அவன் இணைந்திருந்த தொழிற் சங்கத்தின் நியதி.
மகாலிங்கத்தோடு வேலை செய்பவர்கள மகாலிங்கத்தை மகான் என்றே அழைப்பார்கள். ஆனால் அவனுடைய தாயோ அவனை “மகன்” எனறே அழைப்பாள். ஏ லெவல் படித்து, பல்கலைகழகம் புக முடியாத நிலை மகாவிங்கத்துக்கு, ஜெனரல் கிளரிக்கல் சேர்வீஸ் எனப்படும்; பொது அரசாங்க லிகிதர் சேவையில் 1980 இல் லிகிதராகச் சேர்நதான். மேலும் தொடர்ந்து படிக்க, வீட்டு நிலமை அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. வரிசையில் திருமணத்துக்காக காத்திருக்கும் அவனது இரு சகோதரிகளான ராசாத்தியும், மலருமே காரணம்.
யாழ்ப்பாணத்தில் பல குடும்பங்களில், பொறுப்பு என்று வந்துவிட்டால் வீட்டுக்குத் தலை மகன் அதை பாரம் எடுப்பது வழக்கம். பெற்றோரும் அதை எதிர்பார்ப்பார்கள். ஆதனால் மகாலிங்கம் திருமணத்தின் போது சீதனத்தோடு நன்கொடை என்ற டொனேஷன வாங்கி அதை மகள்களுக்கு கொடுப்பதை பெற்றோர் எதிரபார்த்தை குறை சொல்லமுடியாது.
மகாலிங்கத்தின் தந்தை சினத்தம்பி ஒரு தமிழ்ப் புலவர். அவரை தம்பி புலவர் என்றே பெருமையாக ஊரில் அழைப்பார்கள். நாமும் இக்கதையில் அவ்வாரே அவரை அழைப்போம்;. துமிழில் அழகாக உச்சரித்து பேசவும். இலக்கணத்தமிழில் எழுதவும் வல்லவர். அதனால் அரசியல்வாதிகள் அவரின் உதவியை அரசியல் பேச்சுகள் எழுதுவதற்கு நாடுவது உண்டு. பாராட்டி கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். அவருடைய தந்தையாரான பெரியதம்பி புலவரும் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர். தந்தை எவ்வழியோ அவ்வழியே மகனும். கோப்பாய்; ஊரில் உள்ள கல்லூரி ஒன்றில் தம்பி புலவர் தமிழ் ஆசிரியராக இருந்தார்.
தம்பிப்புலவர் குடும்பம் பழமைவாதிகள். புலவரின் மனைவி பவளமும் அதே கல்லூரியில் ஒரு தமிழ் ஆசிரியை. படிதாண்டா பத்தினி. எதையும் கணவனைக் கேட்டுத் தான் நடப்பாள்.; கணவன் சொல்லே அவளுக்கு வேத வாக்கு. இருவருட இடைவெளியில், மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்தவர் புலவர். பொருளாதார வசதியின்மையால் மேலும் தனது உற்பத்தித் திறமையை ஊருக்கு காட்ட அவருக்க விருப்பம் இருந்;தும் அவரால் முடியவில்லை. மூன்றே பொதும் என்று தனது தயாரிப்பை நிறுத்திவிட்டார்.
வீட்டுப் பரிபாலனம் தம்பி புலவர் கையில் இருந்தது.; முக்கியமாக வரவு செலவு கணக்கு பார்த்து செலவு செய்தார் புலவர.. மகாலிஙகம,;; மாதாதச் சம்பளம் கிடைத்தவுடன் அப்படியே சுளையாக கொண்டு வந்து தகப்பன் கையில், அரசாங்கம் கொடுக்கும் சம்பள விபர ரசீதோடு கொடுததாக வேண்டும். அதன் பின்னரே மகனின் சொந்தச்; செலவுக்கு தம்பி புலவர் பணம் கொடுப்பார். இது அவரின் மகனுக்கு ம்டடுமல்ல அசிரியர்களாக இருக்கும் பவளத்துக்கும், மூத்த மகள் இராசாத்திக்கும், ஸ்டெனோகிராபராக நீதி மன்றத்தில் வேலை செய்யும் கடைக்குட்டி மலருக்கும்; பொருந்தும். குடும்பத்தில் உள்ள நான்கு பேர்; உழைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதி சீட்டாக மிச்சம் பிடிப்பதும், அதன் கணக்கை வைத்திருப்பதும் தம்பி புலவர் பொறுப்பு.
தம்பி புலவர் சரியான சிக்கனக்காரர் என்று ஊர் சொன்னாலும்; அதைப்பற்றி அவர் கவலைப் படுவதில்லை. காரணம் கடன் வாங்காமல தன் மகள் இருவரையும் தான் ரிட்டையராக முன்பே கரை சேர்க்க வேண்டும் என்பதே அவரின் முழு நோக்கம்.
மனைவி பவளத்தின் பரம்பரைச் சொத்தான ஆறு பரப்பு காணியோடு சேர்ந்த கோப்பாயில் இருநத மூன்று அறை கல் வீடு தான் அக்கும்பத்தின் குடியிருப்பு. அந்த வீட்டை மலருக்கும் இராசாத்திக்கும் பங்குவீடாகவும் தனக்;கும் பவளத்துக்கும் சீவிய உருத்து வைத்து எழுவது தான் புலவரது திட்டம். அவர்கள் இருந்த வீடோ, தன்னை பாவிப்பவர்கள் கவனிக்க மாட்டார்களா என்று காட்டும் சுவர்களோடு இடிந்த நிலையில் இருந்தது, சுவர்களுக்கு வெள்ளையடித்து; பல வருடங்களாயிற்று. வரும் வருமானத்தை சிக்கனமாக மிச்சம் படித்து சேமித்து வைத்தாhர் புலவர் தன் இரு மகள்மாருக்கும் சீதனமாக கொடுக்க. அதோடு மட்டுமல்ல மகனின் திருமணத்தின் பொது சீதனத்தோடு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக பெறவேண்டும் என்பதும் அவர் திட்டம். தன் சேமிப்போடு அந்த நன்கொடையையும் சேர்த்து சீதனமாய் மகள் இருவருக்கும்; கொடுது;து நல்ல இடத்திலை, உயர் உத்தியோகத்திலை உள்ள மாப்பிளகைளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே தம்பி புலவரின் யோசனை. தன் இரு மகள்மாரின் திருமணத்துக்கு, மகன் மகாலிங்கத்தையே முழுக்க நம்பி இருந்தார் தம்பி புலவர்.
அவர்; இரு திட்டங்களை மனதில் வைத்திருந்தார். ஒன்று இரண்டு இலட்சம் ரூபாய்களை மகனின் திருமணத்தில் நன்கொடையாக பெண் வீட்டாரிடம் ; இருந்து பெற்று, அதை ஒரு இலட்சம் பணமாக பிரித்து, தலா இரு பெண்களுக்கும் தாங்கள் இருக்கும் வீட்டை பங்குவீடாக சீவிய உருத்து வைத்து சீதனமாக கொடுப்பது. இரண்டாவது திட்டம் மகனுக்ம் முத்தவள் இராசாத்திக்கு; மகாலிங்கத்துக்கு வரும் பெண்ணின் சகோதரனோடு மாற்றுத் திருமணம் செய்து வைப்பது. ஆனால் இரண்டாவது திட்டத்தை அவர் அவ்வளவுக்கு விரும்பவில்லை. இந்த மாற்றுத் திருமணத்தால் பிரிந்த சில குடும்பங்களைப் பற்றி அவர் அறிந்திருந்தார். அதோடு நன்கொடை பெற்று மலருக்கு திருமணம் செய்ய முடியாவிட்டால் சீவிய உருத்து வைக்காமல் முழு வீட்டையும் மலருக்கு கொடுக்க வேண்டி வரும். அப்படி நடந்தால் தானும், மனைவி பவளமும் இருக்க வீடில்லாமல் போக வேண்டிய நிலை ஏற்படும். அதனால் முதல் நன்கொடைத் திட்டத்தையே நம்பி இருந்தார் தம்பி; புலவர். அவர் மனைவி பவளமும் அவர் சொன்னதையே மறு பேச்சில்லாமல் ஆமோதித்தாள். இராசாத்தியும், மலரும் தங்களுக்க எந்த வழியிலும் திருமணமானால் சரி என்று இருந்தனர்.
பவளத்தின் அன்பு மகன் மகாலிங்கம். அவனுக்கும் தாய் மேல் சொல்லமுடியாத அளவுக்குப் பற்று. தன் ஓபீஸ் பிரச்சனைகளை தாயோடு அடிக்கடி பகிர்ந்து கொள்வான். தந்தையோடு பேசுவது குறைவு. அவரின் கட்டுப்பாடு அவனுக்குப் பிடிப்பதில்லை.
*******
கையில், மட்டக்களப்புக்கு போக, மாறுதல் கடிதத்தோடு வீட்டுக்கு மகாலிங்கம் வந்த போது பவளம் கைவேலையாய்; குசினிக்குள் இருந்தாள். இராசாத்தியும், மலரும் வேலையால் வீடு திரும்பவில்லை
“அம்மா நீ எங்கை இருக்கிறாய். கொஞ்சம் இங்க வாவன்” என்று சொன்னபடி அவன் எப்போதும் அமரும் கதிரையில் போய் அமர்ந்தான். தன கைப்பையை திறந்து, கடிதத்தை எடுத்து தாயுக்குச் செய்தியை சொல்ல தயாரானான்.
“நீ வேலையாலை வந்திட்டியா மகன்? கொஞ்ம் பொறு, இப்ப வாறன், பனியாரத்தோடையும்; கோப்பியோடையும்” என்று குசினியில் இருந்து பதில் அளித்தாள் பவளம்.
தன் அறைக்குள் பள்ளிக்கூட வேலை செய்து கொண்டிருந்த தம்பி புலவர,; மகனின் குரல் கேட்டு இலக்கணப்; புத்தகமும் கையுமாக ஹாலுக்குள் வந்து, அவர் வழமையாக அமரும்; சாய்மானக் கதிரையில் புத்தகம் வாசிப்பது போல் பாவனை செய்தபடி அமர்ந்தார்.
பவளம் புலவருக்கும் மகனுக்கும் பனங்காய் பணியாரமும் கோப்பியும் தட்டில் கொண்டு வந்து கொடுதாள்;
“ அம்மா பனங்காய் பணியாரம் இராச்சத்திக்கும் மலருக்கும் வச்சிருக்;கிறியா’? மகாலிஙகம் தாயை கேட்டான்.
“ நீ அதைப் பற்றி யோசிக்காதே. அவர்களின் பங்கு வைத்திருக்கிறேன். உனக்கு எப்பவும் தங்கச்சி இருவரிலும் எவ்வளவுக்கு அக்கரை? அதுசரி மகன் என்ன இன்று அசதியாயிருக்கிறாய்”?, பவளம் மகனைக் கேட்டாள்;. அலுவலகத்தில் வேலை அதிகமா? கடந்த மூன்று நாட்களாக நீ அலுவலகத்திலை இருந்து தாமதமாக வரும்; காரணத்தை நான் கேட்க விரும்பவில்லை", பவளம் கரிசனையோடு சொன்னாள்.
தம்பி புலவர், மனைவி மூலம் கொடுத்த பணியாரத்தை சுவைத்து, கோப்யை அருந்தியபடி மனைவிக்கும் மகனுக்கும்; இடையே நடைபெற்ற உரையாடலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்;
"ஓம் அம்மா, ஓவர் டைம் வேலை வரும்; போது , நான் வேலை செய்யும் வாய்ப்பை தவறவிடக் கூடாது. என் தேர்தல் அதிகாரி என்னிலை நல்ல விருப்பம் . அவர் என்னை ஒவ்வொரு நாளும் கூடுதல் மணி நேரம வேலை; செய்ய அனுமதித்திருக்கிறார். நான் இந்த சனிக்கிழமையும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய முடியும்."
"மகன் நீ அதிகமாக வேலை செய்து உடம்பை கஸ்டப்படுத்தாதே” பவளம் சொன்னாள்.
மகாhலிங்கதின் கையில் கடிதத்தைக் கண்ட புலவர் “ தம்பி என்ன கையிலை கடிதம்”? என்று கேட்டார்.
"அடடா கதையிலை, உங்கள்; இருவருக்கும் ஒரு கெட்ட செய்தி சொல்ல மறந்திட்டன்";.
"கெட்ட செய்தியா? அது என்ன? அலுவலகத்தில் ஏதாவது பிரச்னையா? "
"இல்லை ஐயா. என்னை மட்டக்களப்பு கச்சேரிக்கு மாற்றி இருக்கினம். அந்த மாறுதலுக்கான கடிதம் தான் இது. "
"என்ன மாறுதலா? எப்ப இருந்து?" புலவர் கேட்டார்.
"அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து. நான்கு வருஷங்களுக்கு மேலாக நான் யாழ்ப்பாணத்தில் வேலை செய்திட்டன். அதுதான் என்னை வேறு ஊருக்கு மாத்தி இருக்கனம.”;
"மாறுதலை ரத்து செய்ய எம்.பியோடை நான் பேச வேண்டுமா? அவரது மேடைப் பேச்சை அவர்கேட்டு நான் எழுதி வச்சிருக்கிறன். அவரைச் சந்திக்கும் போது உன் மாறுதலைப் பற்றிப் பேசுகிறன் "
"வேண்டாம் ஐயா. நான் மட்டக்ளப்புக்குப் போக மறுத்தால், அது என் பதவி உயர்வைப் பாதிக்கும். மேலும், நான் எழுது வினைஞர் சேவையாளர் சங்கத்தில் அங்கத்தினராக இருக்கிறேன். சங்க விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அதுவுமல்லாமல் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்ற மாற்றப்படடிருக்கிறன்;. ஒரு பொறுப்பான பதவி” என்றான் மகாலிங்கம்
"அப்ப தம்பி எங்களை விட்டிட்டு வெகு தொலைவான இடத்துக்குப் போகப் போறியா? என்றார் பெருமூச்சோடு தம்பிப் புலவர்.
"ஐயா கவலைப்படவேண்டாம் ஒரு வருஷம,; அல்லது இரண்டு வருஷம் அங்கை வேலை செய்துவிட்டு பிறகு நான் மியூச்சுவல் டிரான்ஸ்வர் எடுத்துக் கோணடு திரும்பவும் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு வரத் தெண்டிக்கிறன்"
"மகன் நீ; இங்கே இல்லாமல் நாங்கள் என்ன செய்ய”? . உன் இரண்டு தங்கச்சிமாருக்குத் திருமணங்கள் ஏற்பாடு செய்ய நீ இருந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்" பவளம் விசனப்படடு மகனைக் கேட்டாள்.
"ஐயா இருக்கிறார்தானே எல்லாததையும் கவனிக்க. அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். அவரட தான் வீட்டில் முடிவுகளை எடுப்பவர்".
"தம்பி நீ மட்டக்களப்பு போக வேண்டும் என்று சொன்ன போது நான் சரியாக கவலைப்படுகிறேன். உம்முடைய மாறுதல் கொழும்புக்கு என்றால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டன்", தம்பிப் புலவர் தன ஆதங்கததைத் கவலையோடு தெரிவித்தார்.
"ஐயா கவலை வேண்டாம் ? மட்டக்களப்பும் யாழப்பாணத்தைப் போல ஓரு தமிழ் பகுதிதானே. மேலும் அரசாங்க அதிபரும் ஒரு தமிழர். ஆனால் பயணம் தான் ஒரே ஒரு பிரச்சனை. யாழ்ப்பாணத்தில் இருநது ரயில்pல் போவதெண்டால் மாஹோவில ரயில் மாற வேண்டும். பல மணித்தியாலப் பயணம் "
"நான் ரயில் பயணம் குறித்து பேசவரவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றப்பட்ட இளம் அரசாங்க ஊழியர்களுக்கு அங்கை திருமணம் என்ற பொறியில் சிக்குப்பட்டதைப் பற்றி பல கதைகள் கேள்விபட்டிருக்கிறேன். மட்டக்களப்புப் பெண்களுக்கு யாழ்ப்பாணத்துப் பெடியன்கள் மேல ஒரு கண்ணாம். அதோடை, யாழ்ப்பாணத்துப் பெடியன்களை மயக்க விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒரு மந்தரித்த காத்தான்குடி பாயைப் பாவிப்பார்களாம்”, என்று சொல்லி மகனின் முகத்தை புலவர் பார்ததார்
"ஐயோ கடவுளே! ஐயா நீஙகள் சொல்வதெல்லாம் உண்மையிலi;ல. நானும் உது போன்ற கதைகள் கேள்விபட்டிருக்கிறேன். எனககு என் ஒபீசில் என்னோடு வேலை செய்யும் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பரை நன்கு தெரியும்;. அவர் உதெல்லாம் கட்டுக்கதை என்றார்”.
"நான் மட்டும் சொல்லவில்லை.நம் சமூகத்தில் மக்கள்; பேசியதைத் தான் சொல்கிறேன்.”
“ ஐயா உங்களுக்கு மட்டக்களப்பு மக்கள் பற்றி மிகவும் நல்ல கருத்து இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் போல் அந்த ஊரிலை நல்லாய் படித்த தமிழ் அறிஞர்கள் பலர் உண்டு. அவர்கள் எங்கள் தமிழ்மொழியை நேசிக்கிறவர்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் யாழ்ப்பாணம் மக்களைப் போலவே உள்ளது. நல்ல மனிதர்கள். அங்கு தமிழர்;கள் முஸ்லீம், சிங்கள மக்களோடு இணைந்து வாழ்கிறார்கள்”, மகாலிங்கம் தகப்பனுக்க விளக்கம் கொடுத்தான்.
"ஆனால் எங்கள் கிராமத்தில் இருந்து யாராவது மட்டக்களப்பில் திருமணம் செய்தால் அவர்கயை; நாம் மதிப்பதில்லை. என் மாமா, புகையிலை விறபனைத் தரகர். அவர் மட்டகளப்புவுக்கு வியாhபாரம் செய் போனபோது அவரின மட்டக்களப்பு வியாபார கூட்டாளியின் மகளைக் கண்டு விரும்பி வீட்டிலை சொல்லாமல் கலியாணம் செயதவர்.; எனது மாமாவின் தந்தை அவரோடு; இணைப்பைத் துண்டித்து, அவரை அவரது வீட்டில் நுழைய அனுமதிக்க வில்லை. அது மட்டுமல்ல, என் பள்ளி தலைமை ஆசரியர்; பொன்னுசாமி மாஸ்டரின் மூத்த மகளுக்கு என்ன நடந்தது என்று உனக்குத் தெரியும் தானே ? அவளும் மட்டக்களப்பு பல்கலைக் கழகத்துக்குப் படிக்க போன போது மட்டக்களப்பு பெடியன் ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்;. அது போல உனக்கும் ஏதும் நடந்துவிடக்கூடாது தம்பி "
"அவள் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரை திருமணம் செய்தது எனக்குத் தெரியும் ஐயா. நான் அவரை ஒரு முறை சந்தித்தனான்;. மிகவும் நல்ல மனிதர். அவர் தமிழில் இரண்டு புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறார்;. அவர் அவளை விரும்பி திருமணம் செய்வதில் என்ன குற்றம்? நாஙகள ஒரு வட்டத்துக்குள் மட்டுமே வாழாமல்; மற்ற பகுதிகளில் வாழும் மக்களோடு ஒருங்கிணைய வேண்டும் ஐயா”
"தம்பி, நாங்கள் அவர்களின் வேர்களைத் தெரியாமல் எப்படி ஒருங்கிணைங்க முடியும்? அவரது முதல் மகள் மட்டக்களப்பு திருமணம் செய்ததால், பொன்னுசாமியின் இரண்டாவது மகள் திருமணத்தில்; பல பிரச்சினைகள். இறுதியாக அவர் அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெரிய வரதட்சணை கொடுக்கவேண்டி வந்தது. "
"ஐயா நாங்கள் வாழ்வதோ ஒரு சிறிய தீவு. நீங்கள் அடிக்கடி தமிழ் ஈழம் பற்றி பேசுவீர்களே. வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும் என்பீர்களே. அப்ப ஏன் இந்தப் பாகுபாடு”?
“ மகன், எனக்கு உன்னிலை நல்ல நம்பிக்கை உண்டு. நீ எங்கடை ஊருக்குள்ளை தான் முடிப்பாய் எண்டு”
********
மகாலிங்கம் மட்டக்களப்புக்கு மாறுதலாகிப் போய் கிட்டத்தட்ட ஒரு வருஷமானது. அந்தக் காலத்தில் இரு முறை மட்டுமே ஊருக்கு வந்து போனான். தாய் காரணம் கேட்டதுக்கு, வேலை அதிகம் என்று சாக்குப் போக்குச் சொல்லி சமாளித்து விடுவான். மகாலிங்கத்தின் பிரிவை வீட்டில் எல்லோரும் உணர்ந்தார்கள்;. . மாதாந்தம் தன் செலவு போக தன் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தவறாது தகப்பன் பெயருக்கு மணியோடர் எடுத்து அனப்பிவிடுவான். அதோடு சுருக்கமாக வீட்டில் எல்லோரையும் சுகம் விசாரித்தும,; தான் நலமாக இருப்பாதாகவும் குறிப்பிட்டு ஒரு பக்த்தில் கடிதம் எழுதுவான்.
அவனுடைய நண்பன் பாலகிருஷ்ணன் வீட்டில் தான் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும், வேறு வீடு கிடத்தவுடன் பொய்விடுவதாகவும் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். கடையில் சாப்பிடாமல் பாலகிருஷ்ணனின் தாய் சமைத்த உணவை மகன் சாப்பிடுகிறான என்று கேள்விப்பட்டதும் பவளத்துக்கு மனதுக்குள் சந்தோஷம். பாலகிருஷ்ணன் லீவில் மட்டக்களப்புக்குப் போனபோது, பவளம்;; எலுமிச்சம் ஊறுகாயும், வடகமும், ; முறுக்கு தயார் செய் மகனுக்கு பாலா மூலம் அனுப்பினாள். பாலா வீட்டில் இரு மாதஙகள் தங்கியிருந்த பிறகு, ஆறு தமிழ் அரச ஊழியர்களால் நடத்தப்படும் சம்மரி ஒன்றில் மகாலிங்கத்துக்கு தங்க இடம் கிடைத்தது. ஒரு சமையலகாரன் சம்மரியில் இருப்போருக்கு உணவு தயார் செய்யதான். ஆந்த செய்தி அறிந்த போது தம்பி புலவர குடும்பத்துக்குப் பெரும் நிம்மதி. பாலாவுக்கு சகோதரிகள் இல்லை என எனபதும் அவரகளுக்கு நிம்மதியை கொடுத்தது. தனது கடைசி கடிதத்தில், தீபாவளிக்கு ஒரு வார விடுமுறை நாட்கள் எடுத்துக்கோண்டு; வருவதாக மகாலிங்கம் அவர்களுக்கு எழுதியிருந்தான்; ;. முழு குடும்பமும் அந்த கடிதத்தைப் படித்து சந்தோஷப்பட்டனர்.
தம்பி புலவர், கோண்டாவிலில் மகனுக்கு திருமணம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.; அவர் கேட்ட வரதட்சனை, வீடு நன்கொடை போன்ற தேவைகளச் பெண்ணின் பெற்றோர் சந்திக்கத் தயாராக இருந்தனர். நன்கொiடாயக ரூபாய் ஒரு லட்சம் ஐம்பதாயயிரம்; கொடுக்க ஒப்பு கொண்டனர். பெண் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நேர்சாக வேலை. நல்ல சாதி சனம். பெண்ணின் தகப்பன் அரசாங்கத்தில் சேவேயராக வேலை செய்து ரிட்டையரானவர். தாய் ஒரு ஆசிரியை. பெண்ணுக்கு மணமான ஒரு சகோதரன் மட்டுமே. ஆனால் பெண் கொஞ்சம் கறுப்பு. வாக்குக் கண்பார்வை. உயரம் குறைவு. தம்பிப்புலவருக்குத் தனது வருங்கால மருமகளின் அழகு பற்றி கவலை இல்லை. அவருக்கு நன்கொடை தான் முக்கியம். அவருக்கத் தான் கீறின கோட்டை மகன் தாண்ட மாட்டான் என்று தெரியும். வரதட்சணை அவரது எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்ததும், மற்றும் நல்ல ஜாதகம் பொருத்தம் இருந்ததும் அவர மனதுக்கு திருப்தி. மகன் வந்து திருமணத்துக்கு தலையாட்ட வேண்டியது மட்டும் தான் . தன் தலையிடி முடிந்த மாதரி என்று மனைவிக்கு தம்பி புலவர்சொன்னார்.
"அம்மா நாங்கள் அண்ணாவின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர் எங்களுக்கு நிறைய செய்திருக்கிறார். நாம் அவர் தன் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்ற விருப்புவதைநாம் ஏற்க வேண்டும", இராசாத்தி தாயுக்கு சொன்னாள்.
“மகள் அண்ணருடைய கலியாணத்திலை நீ தலையிடாதே அப்பா அதெல்லாம் முடிவெடுப்பார்”; என்றாள் பவளம்.
ழூழூழூழூழூ
தபால்காரன் சைக்கில் மணியை அடித்து ஒரு பதிவுக்கடிதத்ததை தம்பி புலவர் வீட்டில் கொடுத்துச் சென்றான்.
“ ஏதோ புதுமையாக அண்ணாவிடம் இருந்து பதிவுக்கடிதம் ஒன்று; வந்திருக்கிறது அம்மா” என்றாள் கடிதத்தை கையெழுத்திட்டு வாங்கிய மலர்.
“ தீபாவளி பண்டிகைக்கு அவன் வருவதுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதுக்குள்ளை ஏன் கடிதம்; போடுகிறான். அதுவும் பதிவுத் தபாலில் கடிதம் போட்டிருக்கிறான்” என்றாள் யோசனையோடு பவளம்.
தம்;பிப் புலவர் கல்லூரியில்; இருந்து வீடு திரும்பியதும் கடிதத்தை அவரிடம் இராசாத்தி கொடுதாள்;. அவர் தன் சாய்மானக் கதிரையில் அமர்ந்து, கடிதத்தை கவரில் இருந்து எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.
அன்புள்ள ஐயா, அம்மா , சகோதரிகளுக்கு மகாலிங்கம் எழுதுவது
நான் நலம் உங்கள்; நலமறிய ஆவல். பதிவு அஞ்சல் மூலம் என் கடிதத்தைப்; பெற உஙகளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். என்னை பற்றி நீஙகள் கண்ட கனவை நான் ஏமாற்றயதுக்கு முதலில் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் இப்போது ஒரு திருமணமானவன் என்று சொன்னால் உங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். உங்கள் மருமகள் பெயர் ரஞ்சிதம். அவளது தந்தை மட்டக்களப்பில் ஒரு தொழில் அதிபர். அவள் அவருக்கு ஒரே ஒரு மகள். ரஞ்சிதத்துக்கு மட்டக்களப்பு கச்சேரியில் வேலை. அவள் என் அரசாங்க அதிபரின் கிட்டத்து உறவு. அவளை நான் ஒரு மீட்டிங்கிளை முதலிலை சந்தித்த போது எனக்கு; அவளுடைய அணுகுமுறை மற்றும் நடத்தை பிடித்திருந்தது. அவள் ஒரு எளிமையான தோற்றம் உள்ளவள் அமைதியான பெண். தன் தந்தை பணக்காரன் என்ற பெருமை இல்லாதவள். வேலையிலும் கெட்டிக்காரி. சமூக சேவை பகுதியில் அதிதாரியாக இருக்கிறாள். சமூகத்தில் ;;கான பல தொண்டு; வேலைகளில் ஈடுபட்டவள்;. அவளுக்கு எனனை பிடித்துக்கொட்டது. எனக்கும் அவன்ட தான மனைவி என தீர்மானித்து, அரசாங்க அதிபரின் உதவியொடு அவளின் பெற்றோரை சந்தித்து எங்கள் காதலைப் பற்றிப் சொன்னேன். அவர்களும் எங்களின் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணம் மாமாங்கம் பிள்ளையார்; கோவிலில் போன மாதம் நடந்தது. இந்த விவகாரம் பற்றி என் முந்தைய கடிதங்களில் நான் எழுத விரும்பவில்லை. ரஞ்சிதத்தின் தகப்பன்; உங்களை நன்கு அறிந்தவர் என்று; சொன்னார். பல வருஷங்களுக்கு முன் , அவர் மட்டக்களப்புவுக்கு வியாபார விஷயமாக வந்த போது அவரின் பிஸ்னஸ்; பார்ட்டினர்; மகளை திருமணம் செய்துகொண்டாதாகச் சொன்னார். நீங்கள் ஒரு தடவை, மட்டக்களப்பில் திருமணம் செய்து கொண்ட உங்கள் மாமா முறையானவர் பற்றி என்று என்னிடம் சொல்லியது என் நினைவுக்க உடனே வந்தது. அவர் தான் ரஞ்சிதத்தின் தந்தை, என்றால் ஆச்சரியப ;படுவீர்கள்.; நான் அவரோடு என திருமணததைபற்றி பேசிய போது எனது; இரு சகோதரிகள் திருமணம் தொடர்பான பிரச்சினை பற்றி சொன்னேன். அவர்; உடனே என்னுடைய தங்கைமார்களின் திருமணத்துக்கு உங்களுக்குத் தேவையான பணத்தைத் தான் தருவதாக உறுதியளித்தார். அவர் தநத பணம் இரண்டு இலட்சம் ரூபாய்களுககு ஒரு வங்கி டிராப்ட் எடுத்து இக் கடிதத் தோடு அனுப்புகிறேன். மறுக்காமல் இப்பணத்தை ஏற்று, என்னையும் ரஞ்சிதத்தையும் நீங்களும், அம்மாவும,; தங்கச்சிமாரும் ஆசீரவதியுங்கள். எங்களை ஏற்றுக் கொண்டதாக பதில் போட்டால் தீபாவளிக்கு உங்கள் மருமகளையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு வருகிறேன்
இப்படிக்கு
எங்கள் மகன் மகாலிங்கமும் மருமகள் ரஞ்சிதமும்.
;
கடிதத்தை வாசித்ததும் தம்பி புலவரின் கைகள் நடுங்கத் தொடங்கியது. அவர் நெற்றியில் வியர்வைத் துளிகள் தெரிந்தன. கடித உறைக்குள் வங்கி டிராப்ட் இருக்கிறதா என்று அவருக்குப் பார்க்க விருப்பமில்லை. அவ்ளவுக்கு அவருக்கு மகன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, கடிதத்தையும் கவரையும் மேசையில் வைத்து அமைதி ஆனார்.
இராசாத்தி கடிதத்தை எடுத்து, உரத்து தாயும் மலரும் கேட்க வாசித்தாள்.
கவருக்குள் இரண்டு இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு வங்கிச் செக் தம்பி புலவர் பெயரில் இருந்தது.
“அப்பா நான் முந்தியே சொன்னேனே அண்ணாவின உணர்வுகளை நீங்கள் மதிக்கவேண்டும் என்று. உங்களுக்கு, எங்கள் திருமணத்துக்குத் தேவையான நன்கொடை பணத்தை அண்ணா அனுப்பிருக்கிறார். இனி அதை ஏற்பதா இல்லையா என்பது உங்கள் இஷ்டம்” என்றாள் மைதியாக இராசாத்தி
“ அக்கா சொல்வது சரியப்பா “ என்றாள் மலர். பவளம் வாய் திறக்வில்லை.
சற்று நேரம் கதிரையில் இருந்து தலையில் கைவைத்து யோசித்துவிட்டு கடிதத்தையும் பாங் டிராப்டையும் எடுத்துக்கோண்டு தன் அறைககுள் போனா தம்பி புலவர் சற்று நேரத்தில் திரும்பி வந்து, முத்த மகளைப் பார்த்து.
“ ராசாத்தி அண்ணாவுக்கு போன் செய்து சொல்லு தலைத் தீபாவளிக்கு அண்ணியோடை வரச்சொல்லி” என்ற சுருக்கமாக சொல்லிலிட்டு தன் அறைக்குள் திரும்பவும் தம்பி புலவர் போனார்.
ஏல்லோர் முகங்களிலும் புன்சிரிப்பு தெரிந்தது.
அவர் அறைக்குள் போன பின் ,; ராசாத்தி தாயைப் பார்த்து அம்மா பார்த்தியலா, " பணம் பத்தும் செய்யும்" என்பது எவ்வளவுக்கு உண்மை என்பதை” என்றாள் சிரித்தபடி.
*******